BSNL அசத்தல் ரீசார்ஜ் பிளான்.. ரூ.1 இருந்தால் போதும், 30 நாட்கள் 2GB டேட்டா

Bsnl Recharge Plan: பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), வாடிக்கையாளர்களின் வலுவான கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் வைரலான தனது ₹1 ‘ஃப்ரீடம் திட்டத்தை’ மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய பயனர்கள் வெறும் ஒரு ரூபாய்க்கு ஒரு மாத காலத்திற்கு அன்லிமிடெட் சேவைகளைப் பெறலாம் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

₹1 திட்டத்தின் முழு விவரங்கள்

பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், பயனர்கள் இப்போது ₹1க்கு உண்மையான டிஜிட்டல் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

Back by public demand – BSNL’s ₹1 Freedom Plan!

Get, a Free SIM with 2GB data/day, unlimited calls and 100 SMS/day for 30 days of validity.

Applicable for new users only! #BSNL #AffordablePlans #BSNLPlans #BSNLFreedomPlan pic.twitter.com/pgGuNeU8c2

— BSNL India (@BSNLCorporate) December 1, 2025

வேலிடிட்டி- 30 நாட்கள்

டேட்டா- தினமும் 2ஜிபி அதிவேக 4G டேட்டா

அழைப்புகள்- இந்தியா முழுவதும் வரம்பற்ற வாய்ஸ் கால் (ரோமிங் உட்பட)

எஸ்எம்எஸ்- தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்

சிம் கார்டு- ₹1-க்கு புதிய BSNL சிம் வாங்க வேண்டும்

இந்தச் சலுகையின் மூலம், பயனர் எந்த நெட்வொர்க்குக்கு அழைத்தாலும் கூடுதல் கட்டணம் எதுவும் இருக்காது. 2ஜிபி டேட்டா வரம்பு முடிந்த பின்னும், டேட்டா சேவை 40 Kbps வேகத்தில் தொடர்ந்து கிடைக்கும்.

புதிய பயனர்களுக்கு மட்டுமே சலுகை

முன்னதாக ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம், தற்போது டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31, 2025 வரை அமலில் இருக்கும். பிஎஸ்என்எல் இச்சலுகை புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்றும், ஏற்கனவே உள்ள பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த ₹1 சலுகையைப் பெற முடியாது என்றும் தெளிவாக அறிவித்துள்ளது. புதிய சிம் கார்டை வாங்கும் போது மட்டுமே இந்த ஃப்ரீடம் திட்டத்தின் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

மாணவர்களுக்கான சிறப்பு ‘Learner’s Plan’

₹1 திட்டத்துடன் சேர்த்து, மாணவர்களுக்கான பிரத்யேகத் திட்டம் ஒன்றையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. “Learner’s Plan” அல்லது மாணவர் சிறப்புத் திட்டம் என்றழைக்கப்படும் இந்தத் திட்டம் விவரங்கள்:

விலை: ₹251

டேட்டா: 100GB அதிவேக டேட்டா (28 நாட்களுக்கு)

அழைப்பு/எஸ்எம்எஸ்: வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS

காலக்கெடு: இந்தச் சலுகை டிசம்பர் 13, 2025 வரை செல்லுபடியாகும்.

குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் அழைப்புச் சலுகைகளை வழங்குவதன் மூலம், சந்தையில் மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பிஎஸ்என்எல் ஒரு வலுவான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

 

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.