தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலி

ராய்ப்பூர்,

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் விராட் கோலி, ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்து அசத்தினர். பின்னர் 359 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது 4-வது சதத்தை எடுத்த மார்க்ரம் 110 ரன்கள் (98 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் , இந்த போட்டியில் சதமடித்ததால் விராட் கோலி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்துள்ளார்.

ராய்ப்பூர் மைதானத்தில் விராட் கோலி அடித்த சதம், அவரது 53-வது சதமாகும். இதையும் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் 34 இடங்களில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக வெவ்வேறு இடங்களில் சதம் அடித்தவரான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை (இவரும் 34 இடத்தில் சதம்) சமன் செய்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.