AVM Saravanan: "அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்"- கண்ணீரில் சிவகுமார்

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது.

சிவாஜி, கமல்ஹாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நான் உட்பட பல பேரை ஏ.வி.எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த நிறுவனத்தில் நடிக்காத நடிகர்களே கிடையாது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.

ஏ.வி.எம் சரவணன்
ஏ.வி.எம் சரவணன்

1965-ல் என்னை இந்த நிறுவனம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது.

என்னுடைய சொந்தபெயர் பழனிசாமி. இந்தப் பெயரை சிவகுமார் என்று மாற்றி வைத்தவர் ஏ.வி.எம் சரவணன் சார்தான்.

அவரின் நியாபக அர்த்தமாகத்தான் சூர்யாவிற்கு சரவணன் என்று பெயர் வைத்தேன்.

என்னுடைய முதல் படத்தில் நான் நடித்த சில காட்சிகளை எடுத்துவிட்டார்கள். அதனால் நான் அழுதேன்.

அப்போது சரவணன் சார் என்னிடம் “மன்னித்து விடுங்கள் சிவகுமார். சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுப்போம்” என்று சொன்னார்.

அதன்பிறகு ‘உயர்ந்த மனிதன்’ என்ற ஒரு படத்தில் நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று.

என்னுடைய அடுத்த தலைமுறையில் சூர்யாவிற்கு ‘பேரழகன்’, ‘அயன்’ படங்களைக் கொடுத்தார்கள்.

சிவகுமார் - சூர்யா
சிவகுமார் – சூர்யா

இரண்டுமே வெற்றி படங்கள். சூர்யா வாழ்வில் மறக்கமுடியாத இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

எனது முதல் படத்தின் சம்பளம் 1000 ரூபாய். ஆனால் சூர்யாவிற்கு அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தார்கள்.

தமிழ் சினிமாவில் பல ஹிட்டான படங்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.

88 வருட வாழ்க்கையை சரவணன் சார் நிறைவாக வாழ்ந்துவிட்டு இறந்திருக்கிறார். அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.