IND vs SA: சிஎஸ்கே வீரர் அதிரடி ஆட்டம்.. தோற்கவே இவர்தான் காரணமே..ஆனால் பாராட்டிய அஸ்வின்!

Ravichandran Ashwin on Dewald Brevis: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் இந்திய அணியை தோற்கடித்த நிலையில், ஒருநாள் தொடரிலும் இந்திய அணியை தோற்கடிக்கும் முனைப்பில் விளையாடி வருகிறது. நவம்பர் 30ஆம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்களில் வென்ற நிலையில், நேற்று (டிசம்பர் 03) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Add Zee News as a Preferred Source

India vs South Africa 2nd ODI: 358 ரன்கள் இலக்கு 

இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதல் இந்திய அணி பேட்டிங் செய்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் 358 ரன்கள் அடித்தது. விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்து இந்திய அணி பெரிய ஸ்கோர் எடுக்க உதவினர். இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், 4 பந்துகள் மீதம் வைத்து 362 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் இத்தொடரை தென்னாப்பிரிக்கா அணி தக்கவைத்துக்கொண்டது.

CSK Player Dewald Brevis: ரெவால்ட் பிரெவிஸ் அதிரடி 

தென்னாப்பிரிக்கா அணி சார்பில், எய்டன் மார்க்ரம் 110 ரன்களை குவித்திருந்தார். மேத்யூ ப்ரீட்ஸ்கே 68, டெவால்ட் பிரெவிஸ் 54, பவுமா 46 ரன்கள் அடித்திருந்தனர். அணியின் வெற்றிக்கு பலரும் பங்காற்றி இருந்தாலும் பிரெவிஸின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அவர் 158 ஸ்ட்கை ரேட்டில் விளையாடினார். 34 பந்துகளில் 54 ரன்களை குவித்தார். இவரை வீழ்த்தி இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். இந்த நிலையில், டெவால்ட் பிரெவிஸை பாராட்டி தள்ளி இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். 

Ravichandran Ashwin: பாராட்டி தள்ளிய அஸ்வின் 

அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், “ப்ரெவ்-பால் (Brev-ball) ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்” என்று வர்ணித்துள்ளார். அதாவது டெவால்ட் பிரெவிஸின் ஆட்டம் ஒரு அதிராக இருந்தது என்றும் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது என்று அவர் பாராட்டி உள்ளார். 

IND vs SA ODI: தொடரை கைப்பற்றப்போவது யார்? 

இந்திய – தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 06) விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் வெல்வோர் தொடரை கைபற்றுவார்கள்ல் என்பதால் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

India – South Africa Squad: இரு அணி வீரர்கள் 

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர் & கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜூரல், திலக் வர்மா. 

தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ராம், டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே,டோனி டி ஜோர்ஜி,டெவால்ட் ப்ரீவிஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லுங்கி என்கிடி, ரியான் ரிக்கல்டன், பிரேனெலன் சுப்ரயன், ஒட்னீல் பார்ட்மேன், ரூபின் ஹெர்மன்.

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.