சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலை மூலம், 830 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் இன்று (டிச. 5) பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவியுள்ள உற்பத்தி தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டது. ‘ ரூ.1003 கோடி முதலீட்டில் 830 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்த தொழிற்சாலையில், கண்ணாடி உற்பத்தி செய்யப்பட உள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் […]