சென்னை: தமிழ்நாட்டில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ள காங்கிரஸ் பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய் சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என்று சொல்லியிருக்கிறார் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக தலைவர் விஜய்யுடன், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என கூறப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை டிச. 5 நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு […]