Aadhaar : மத்திய அரசால் வழங்கப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை, இன்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். வங்கிக் கணக்கு தொடங்குவது முதல், அரசு நலத்திட்டங்களைப் பெறுவது, மொபைல் இணைப்பு பெறுவது வரை அனைத்து அத்தியாவசியப் பணிகளுக்கும் ஆதார் அட்டை இன்றியமையாதது. அத்தகை ஆதார் தகவல்களை ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். உங்களின் பயோமெட்ரிக் விவரங்கள் இதில் இருப்பதால், அதைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.
Add Zee News as a Preferred Source
உங்கள் ஆதார் அட்டை தொலைந்து விட்டாலோ அல்லது அதன் எண்ணை மறந்துவிட்டாலோ பதற்றம் அடையத் தேவையில்லை. UIDAI (Unique Identification Authority of India) இணையதளம் மூலம் அல்லது பிற வழிகளில் உங்கள் ஆதார் விவரங்களை எளிதாக மீட்டெடுக்க முடியும்.
1. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் மீட்டெடுக்கும் முறை (ஆன்லைன்)
உங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி இணைக்கப்பட்டிருந்தால், இந்த முறை மிகவும் எளிதானது
1. UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளதுக்கு செல்லுங்கள். அதில் உள்ள ‘Retrieve UID/EID’ என்ற https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid ஆப்சனுகுச் செல்லவும்.
2. நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் ஆதார் எண் அல்லது பதிவு ஐடி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. ஆதாரில் உள்ளபடி உங்கள் முழுப் பெயர் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
4. திரையில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டை சரியாக உள்ளிடவும்.
5. ‘Send OTP’ (ஓடிபி அனுப்பு) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒருமுறை கடவுச்சொல் (OTP) எஸ்எம்எஸ் மூலம் வரும்.
6. வந்த ஓடிபி எண்ணைப் பதிவு செய்து, சரிபார்ப்பை (Verify) நிறைவு செய்யவும்.
7. சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் ஆதார் எண், EID உங்கள் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பப்படும். இந்தச் சேவைக்கு கட்டணம் எதுவும் இல்லை.
2. மொபைல் எண் இணைக்கப்படாதபோது ஆதார் எண்ணை மீட்டெடுக்கும் வழிமுறைகள்
1. நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையம் (Aadhaar Seva Kendra) அல்லது பதிவு மையத்திற்கு நேரில் சென்று அங்கே உள்ள அதிகாரியின் உதவியுடன் உங்கள் ஆதாரை மீட்டெடுக்கலாம்.
2. ஆதார் எண் வைத்திருந்து, தொலைத்தவர் நேரடியாக ஆதார் பதிவு மையத்தை அணுக வேண்டும்.
3. அதிகாரியிடம் உங்கள் பெயர், பாலினம், மாவட்ட அல்லது பின் குறியீடு போன்ற கட்டாய விவரங்களை ஆதாரில் உள்ளபடி வழங்க வேண்டும்.
4. பதிவு மையத்தில் ஒற்றை கைரேகை (Single Fingerprint) அல்லது ஒற்றை கருவிழி (Single Iris) மூலம் பயோமெட்ரிக் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
5. பயோமெட்ரிக் விவரங்கள் பொருந்தினால், அதிகாரி உங்கள் இ-ஆதார் கார்டை அச்சிட்டு வழங்குவார்.
6. இந்தச் சேவைக்கு அதிகாரபூர்வமாக ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படலாம்.
UIDAI உதவி எண் 1947 மூலம் ஆதார் கண்டுபிடிப்பு
1. UIDAI-இன் கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் ஆதாரைக் கண்டறிய முயற்சிக்கலாம்.
2. கட்டணமில்லா உதவி எண் 1947-ஐ அழைக்கவும்.
3. சேவை மையத்தில் உள்ளவர்கள் கேட்கும் பெயர், பிறந்த தேதி போன்றவை வழங்கவும்.
4. விவரங்கள் பொருந்தினால், உங்கள் EID உடனடியாக தொலைபேசி அழைப்பிலேயே வழங்கப்படும். இந்தச் சேவைக்கு கட்டணம் இல்லை.
ஐவிஆர்எஸ் (IVRS) மூலம் ஆதார் எண் பெறுதல்
1. மீண்டும் 1947-ஐ அழைக்கவும்: மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு, Request Status விருப்பமான ‘1’-ஐ அழுத்தவும்.
2. அதைத் தொடர்ந்து ஆதார் பதிவு நிலை (Aadhaar Enrolment Status) விருப்பமான ‘2’-ஐ அழுத்தவும்.
3. நிலை 1-இல் பெறப்பட்ட EID எண்ணை உள்ளிடவும்.
4. பிறகு உங்கள் பிறந்த தேதி (Date of Birth) மற்றும் பின் குறியீட்டை உள்ளிடவும்.
5. விவரங்கள் பொருந்தினால், IVRS மூலமாக உங்கள் ஆதார் எண் தெரிவிக்கப்படும். இந்தச் சேவையும் இலவசமானது.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More