இந்தியா- தென்னாப்பிரிக்கா முதல் டி20 : இலவசமாக நேரலையில் பார்ப்பது எப்படி?

IND vs SA 1st T20 Live: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடிய அந்த அணி, இந்திய அணியை வீழ்த்தி அந்த தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.  விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடக்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் படை களம் காணவிருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

முதல் டி20 போட்டி எங்கே? எப்போது?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி ஒடிசாவின் கட்டாக் நகரத்தில் அமைந்துள்ள பாராபாட்டி மைதானத்தில் (Barabati Stadium, Cuttack) நடைபெறுகிறது.

போட்டி நாள்: செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 9, 2025

டாஸ் நேரம்: இந்திய நேரப்படி மாலை 6:30 மணி

போட்டி தொடங்கும் நேரம்: இந்திய நேரப்படி மாலை 7:00 மணி

நேரலையில் பார்ப்பது எப்படி?

இந்த டி20 போட்டியைத் தங்கள் தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன்களில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

தொலைக்காட்சி ஒளிபரப்பு: இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Star Sports Network) சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: போட்டியின் நேரலை ஒளிபரப்பு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலி மற்றும் இணையதளத்தில் பார்த்து ரசிக்கலாம்.

டி20 தொடரின் முழு அட்டவணை

1வது டி20 – டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை, கட்டாக்
2வது டி20 – டிசம்பர் 11, வியாழன், சண்டிகர் (Mullanpur)
3வது டி20 – டிசம்பர் 14, ஞாயிறு, தர்மசாலா
4வது டி20 – டிசம்பர் 17, புதன், லக்னோ
5வது டி20 – டிசம்பர் 19, வெள்ளி, அகமதாபாத்

இந்திய அணி (இந்தியா): சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் ஷர்மா (WK), சஞ்சு சாம்சன் (WK), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

தென் ஆப்பிரிக்கா அணி (South Africa): எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டெவால்ட் பிரெவிஸ், டோனி டி சோர்சி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், மார்கோ ஜான்சென், குயின்டன் டி காக் (WK), டொனோவன் ஃபெரீரா (WK), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஓட்னியல் பார்ட்மேன், கேசவ் மஹராஜ், குவேனா மாபகா, லுங்கி இங்கிடி, ஆன்ரிச் நார்ட்ஜே.

அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடக்க உள்ளது. அதனால், இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் பிளேயர்கள் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடத்தை உறுதி செய்து கொள்ளலாம். எனவே, இந்த தொடர் இந்திய பிளேயர்களுக்கு மிகவும் முக்கியமான தொடர். ஒவ்வொரு போட்டியிலும் பிளேயர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் திறமையை வெளிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில், தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.