நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்துகொள்ளும் பெண் – அடடே லவ் ஸ்டோரி

சீனாவில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

2008ஆம் ஆண்டு சீனாவின் வென்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது 22 வயதான லியோங் என்பவர் அவசர மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் பத்து வயதான லியூ என்ற பெண் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். லியோங் மற்றும் அவரது மீட்பு குழுவினர்கள் அங்கு பலரையும் காப்பாற்றிய நிலையில் இடிபாடுக்குள் சிக்கியிருந்த லியூவையும் அவர் மீட்டுள்ளார்.

marriage

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, 2020 ஆண்டு தனது பெற்றோருடன் லியூ உணவருந்திக் கொண்டிருக்கும்போது ஒருவரை அவர் பார்த்திருக்கிறார்.

அவர் தன்னை காப்பாற்றிய மீட்பு வீரர் போன்று இருப்பதாக தனது தாயிடம் கூறியிருக்கிறார். அதன் பின்னர் அவரிடமே அவரது பெயரை கூறி நீங்களா? என்று கேட்டிருக்கிறார். அவர் ”ஆம் லியோங் தான்” என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு நடந்த சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அன்று இரவே இருவரும் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கி இருக்கின்றனர். அதன் பின்னர் தங்களது உணர்வுகளை பகிர தொடங்கி இருக்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபரையே லியூ திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து லியூ கூறுகையில்”அவரை நன்றி உணர்வுக்காக நேசிக்கவில்லை, ஒன்றாக நேரம் செலவழித்த பின்னர் மட்டுமே என் வாழ்க்கையை ஒப்படைக்க கூடிய நபர் இவர் தான் என்பதை உணர்ந்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.