IND vs SA T20: பிளேயிங் 11ல் குல்தீப் இல்லை? போட்டிப்போடும் இரண்டு வீரர்கள்.. முழு விவரம்!

India vs South Africa 1st T20: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் முடிவடைந்துள்ளன. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்காவும் ஒருநாள் தொடரை இந்தியாவும் வென்றது. இந்த சூழலில், நாளை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இத்தொடருக்கு சூர்யகுமார் யாதவ்  தமையிலான 15 பேர் கொண்ட வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். 

Add Zee News as a Preferred Source

Suryakumar Yadav, Gautam Gambhir Confused: மூன்று வீரர்கள் போட்டி             

இந்த நிலையில், இந்திய அணியில் ஒரு இடத்திற்காக 3 வீரர்கள் போட்டி போட்டுகிறார்கள். இதனால் யாரை பிளேயிங் 11ல் கொண்டு வருவது என்ர குழப்பம் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் கம்பீருக்கு ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா திரும்பி உள்ளனர். தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் கில் களமிறங்கி விடுவார்கள், அதன் பிற்கு திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் களமிறங்குவார்கள். 

Kuldeep Yadav: குல்தீப் யாதவ் இல்லை? 

விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சனை எடுப்பதா அல்லது ஜுதேஷ் சர்மாவை எடுப்பதா என்ற யோசனை சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், 8வது இடத்திற்குதான் யாரை எடுப்பது என குழப்பம் நிலவி கொண்டிருக்கிறது.  அதாவது அந்த இடத்தில் குல்தீப் யாதவை கொண்டு வருவதா அல்லது வாஷிங்டன் சுந்தரை கொண்டுவருவதா? என்ற குழப்பம் உள்ளது. 

கம்பீர் பயிற்சியாளராக வந்த பின்னர் பிளேயிங் 11ல் அதிக ஆல் ரவுண்டர்களை வைத்துக்கொள்ள விரும்புகிறார். இதனால் அந்த இடத்திற்கு வாஷிங்டன் சுந்தரை கொண்டு வரலாமா என்ற யோசனை உள்ளது. மறுபக்கம் குல்தீப் யாதவ் ஒருநாள் தொடரில் அற்புதமாக பந்து வீசி நல்ல ஃபார்மில் உள்ளார். இதனால் அணிக்குள் குல்தீப் வந்தால் பேட்டிங்கின் வலு குறையும், அதுவே வாஷிங்டன் சுந்தர் வந்தால், பேட்டிங்கில் பலம் சேர்க்கலாம். இதனால் வாஷிங்டன் சுந்தருக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என தெரிகிறது. 

Shivam Dube: சிவம் துபே-க்கு வாய்ப்பு 

அதே சமயம் இரவு நேர பணிப்பொழிவில் சுழற்பந்து வீச்சாளர் சிரமப்படுவார்கள் என்பதால், ஆல்-ரவுண்டரான சிவம் துபேவுக்கு வாய்ப்பளிக்கலாம் என கூறப்படுகிறது. சிவம் துபேவும் சமீபமாக பந்து வீச்சில் அசத்தி வருகிறார். இதனால் அவருக்கு வாய்ப்பளிக்க கம்பீர் மற்றும் சூர்யகுமார் முன் வருவதாகவும் தெரிகிறது.  

 India Squad Against South Affrica T20 Series: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மான் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.