Lucknow Super Giants: 2026 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்கள் நடக்கும். இத்தொடருக்கு இப்போதில் இருந்தே எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பாக அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவித்த மற்றும் தக்கவைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதேபோல் மினி ஏலம் தொடங்குவதற்கு முன்பாகவே சில வீரர்களை மற்ற அணியிடம் பேசி டிரேட் முறை மூலம் வாங்கிக்கொண்டது.
Add Zee News as a Preferred Source
2026 IPL Mini Auction: ஐபிஎல் மினி ஏலம்
உதாரணத்திற்கு சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை வாங்கியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முகமது ஷமியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் பேசி வாங்கிக்கொண்டது. மேலும், வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சில முக்கிய வீரர்களை வாங்கவும் அனைத்து அணிகளும் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மினி ஏலத்தில் 4 வீரர்களுக்கு கடுமையாக போட்டியிடும் என தெரிகிறது. இந்த வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரரும் உள்ளார்.
மதீஷா பத்திரனா ((Matheesha Pathirana Released By CSK)
2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியில் இருந்து விடுக்கப்பட்ட மதீஷா பதிரானாவுக்கு குறிவைக்கும் என தெரிகிறது. அவர்களிடம் முகமது ஷமி, மயங்க் யாதவ் ஆகியோர் இருந்தாலும், டெத் ஓவர்களை வீச ஒரு தரமான பவுலர் தேவையாக உள்ளது. அதன் காரணமாக அவர்கள் பதிரானாவை வாங்க முயற்சிப்பர். மறுப்பக்கம் சென்னை அணி மதீஷா பதிரானாவை குறைந்த விலையில் வாங்கவே விடுத்ததாக தெரிகிறது. ஆனால் இவருக்கு மினி ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.
மதீஷா பதிரானா ஐபிஎல்லில் இதுவரை சிஎஸ்கே அணிக்காக மட்டுமே விளையாடி உள்ளார். மூன்று சீசன்களிலும் அவர் 32 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரியாக 21.61 மற்றும் எகானமி 8.68 ஆகும்.
ராகுல் சாஹர் (Rahul Chahar released By SRH)
அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணியால் விடுவிக்கப்பட்ட ராகுல் சாஹருக்கு போட்டி போடும் என தெரிகிறது. லக்னோ அணி அந்த அணியில் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரவி பிஷ்னோய்யை விடுவித்துள்ளதால், அவர்கள் ராகுல் சாஹரை வாங்க நினைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களிடம் திக்வேஷ் ரதி இருப்பதால், அவருடன் இவரை சேர்க்க முயற்சி செய்வார்கள். இதன் மூலம் அவர்களது சுழற்பந்து வீச்சு பலமடையும். லெக் ஸ்பின்னரான ராகுல் சாஹர் இதுவரை ஐபிஎல்லில் 75 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இவருக்கு பல ஐபிஎல் அணிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது.
வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer Released By KKR)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரை டார்கெட் செய்யும் என தெரிகிறது. டேவிட் மில்லரை விடுவித்துள்ளதால், இந்த வீரருக்கு குறிவைக்க வாய்ப்புள்ளது. இவரை லக்னோ அணி தங்களுடன் சேர்க்கும் நிலையில், அந்த அணியின் மிடில் ஆர்டர் மேலும் வலுவடையும். அதிரடி பேட்ஸ்மேனான வெங்கடேஷ் ஐயர் கடந்த ஐபிஎல்லில் ரூ. 20 கோடிக்கு மேல் வாங்கப்பட்டார். இவர் இதுவரை 62 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆதில் 12 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 1468 ரன்களை அடித்துள்ளார்.
அபினவ் மனோகர் (Abhinav Manohar Released By SRH)
லோயர்-மிடில்-ஆர்டர் இந்திய பேட்ஸ்மேனான அபினவ் மனோகரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) குறிவைத்து கைப்பற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கடந்த ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஃபினிஷருக்கான இடத்தில் விளையாடிய இவர் அந்த அணி விடுத்துள்ளது. அவரை விடுவித்ததன் மூலம் SRH அணிக்கு ரூ. 3.20 கோடி கிடைத்திருக்கிறது. அபினவ் மனோகர் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானதிலிருந்து 27 போட்டிகளில் விளையாடியுள்ளார், இதுவரை 15.36 சராசரியுடன் மொத்தம் 292 ரன்கள் எடுத்துள்ளார்.
CSK vs LSG: மதீஷா பத்திரனாவுக்கு கடும் போட்டி இருக்கும்
மிதீஷா பத்திராவை விடுவித்த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ. 13 கோடி கிடைத்தது. ஒரு பெரிய தொகை கிடைக்கிறது என்பதனாலேயே சிஎஸ்கே இப்படி ஒரு ரிஸ்க் எடுத்திருக்கிறது. நிச்சயம் அவரை மினி ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும். ஆனால் எல்எஸ்ஜி போன்ற அணி போட்டிக்கு வந்து விலையை ஏற்றிவிடும் பட்சத்தில் அவரை சிஎஸ்கே அணி எடுக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. எப்படியானலும் மினி ஏலத்தில் பத்திரனாவுக்கு கடும் போட்டி நிலவும். இறுதியில் அவர் எந்த அணிக்கு செல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
About the Author
R Balaji