தனது காதலை உறுதி செய்த ஹர்திக் பாண்டியா! புதிய காதலி யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது அதிரடி ஆட்டத்திற்கு மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தற்போது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கட்டாக் டி20 போட்டியில் அபார வெற்றிக்கு பிறகு, ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மாவுடனான உறவை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Add Zee News as a Preferred Source

Hardik Pandya said, “a special mention to my partner. A lot of great things have happened, she’s nothing but best to me ever since she arrived in my life”. pic.twitter.com/8oXwJ7TBGp

— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 10, 2025

கட்டாக் போட்டியில் ஹர்திக் மாஸ்

செவ்வாய்க்கிழமை டிசம்பர் 9 கட்டாக்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் இமால வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஹர்திக் பாண்டியா. வெறும் 28 பந்துகளில் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அவர், பந்துவீச்சிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்களை விளாசிய சாதனையும் இந்த போட்டியில் அவர் படைத்தார்.

காயத்திற்குப் பிறகு கம்பேக்

ஆசிய கோப்பை தொடரின்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த பாண்டியா, தற்போது கம்பேக் கொடுத்துள்ளார். போட்டி முடிந்த பிறகு பிசிசிஐ வெளியிட்ட வீடியோ ஒன்றில் பேசிய அவர், தனது காயத்தை பற்றியும், அந்த கடினமான காலங்களில் தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பற்றியும் மனம் திறந்து பேசினார். அந்த வீடியோவில் ஹர்திக் பேசுகையில், “காயம் ஏற்படும் காலங்கள் ஒரு வீரருக்கு மிகவும் சோதனையானவை. அது மனரீதியாக பல சந்தேகங்களை நமக்குள்ளே எழுப்பும். ஆனால், இந்த நேரத்தில் எனக்கு துணையாக நின்ற என் அன்புக்குரியவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்றார்.

Hardik Pandya works out with his Girlfriend, Mahieka Sharma 

Cute couple in the Town 
Couple Fitness Goals .

 Hardik Pandya insta pic.twitter.com/hkl5ggX2ZR

— FTino (@FernadoTin10172) December 5, 2025

மஹிகா சர்மா

தொடர்ந்து பேசிய அவர், “குறிப்பாக என் பார்ட்னரை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகு, எல்லாமே நல்லபடியாக மாறிவிட்டது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் மஹிகா சர்மாவின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவர் யாரை சொல்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெளிவாக புரிந்தது. ஹர்திக் பாண்டியாவின் இந்த வீடியோவை பிசிசிஐ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தது. இதற்கு மஹிகா சர்மா ஒரு எமோஜியை கமெண்டாக பதிவிட்டுள்ளார். மேலும், ஹர்திக் பாண்டியாவும் அந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில், “உன்னை மாதிரி யாரும் இல்லை ராஜா” (There is no one like you Raja) என்று பதிவிட்டுள்ளார். இது இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கத்தை உறுதி செய்வது போல அமைந்துள்ளது. சமீபகாலமாக இவர்கள் இருவரும் பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக சுற்றி வருவதும், சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்வதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த மஹிகா சர்மா?

24 வயதான மஹிகா சர்மா, டெல்லியை சேர்ந்த ஒரு பிரபல மாடல் ஆவார். பல முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களுக்காக இவர் ராம்ப் வாக் செய்துள்ளார். இசை ஆல்பங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். ‘மாடல் ஆஃப் தி இயர்’ விருதை வென்றுள்ள இவரை, இந்தியாவின் வளர்ந்து வரும் ஃபேஷன் ஐகானாக பல பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. படிப்பிலும் கெட்டிக்காரரான மஹிகா, பொருளாதார துறையில் பட்டம் பெற்றவர் என்பது கூடுதல் தகவல்.  ஹர்திக் பாண்டியா, கடந்த 2020-ம் ஆண்டு மாடல் நடாஷா ஸ்டான்கோவிக்கை மணந்தார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ளார். நான்கு வருடத் திருமண வாழ்க்கைக்கு பிறகு, ஜூலை 2024ல் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு பாடகி ஜாஸ்மின் வாலியாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஹர்திக், தற்போது மஹிகா சர்மாவுடன் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.