‘வந்தே மாதரம்’ குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திர போசுக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்தக் கடிதத்தில் “இந்தப் பாடல் முஸ்லீம்களை கொதிப்படையச் செய்யும்” என்று நேரு கூறியுள்ளதாக எடுத்துரைத்தார். அதேவேளையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அதே கடிதத்தில் உள்ள மற்ற வரிகளைச் சுட்டிக்காட்டி மோடியின் கூற்றை எதிர்த்து பேசினார். மோடி கூறியது: காங்கிரஸ் மற்றும் நேரு, முஸ்லிம் லீக்கின் […]