வெய்ட்டிங் ஓவர்! 48MP ஷூட்டருடன் மாஸ் என்ட்ரி தரப்போகும் Google Pixel 10a

Google Pixel 10 Smartphone: கூகிள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் கூகிள் பிக்சல் 10 தொடரின் கீழ் சந்தைக்கு அறிமுகமாக உள்ளது. இந்த போன் தொடர்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அதன்படி சமீபத்தில் கசிந்த தகவலின் படி, இந்த போன் 6.3-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்படும். கூடுதலாக, போனில் டென்சர் G4 செயலி பொருத்தப்பட்டிருக்கும். புகைப்படம் எடுப்பதற்காக, போனில் 48MP முதன்மை கேமரா இடம்பெற்றிருக்கும். மேலும் போனின் பேட்டரி 5,100mAh ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் தொடர்பான அனைத்து விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Add Zee News as a Preferred Source

Google Pixel 10a key specifications leak
கூகிள் பிக்சல் 10a ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் பற்றிய விவரங்களை டிப்ஸ்டர் இவான் பிளாஸ் தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார். டிப்ஸ்டரின் கூற்றுப்படி, இந்த தொலைபேசி வெரிசோனின் சான்றிதழ் தரவுத்தளத்தில் காணப்பட்டு, அதன் அம்சங்களை வெளிப்படுத்துகிறது.

Look what just got certified for use on Verizon’s network. pic.twitter.com/OS5mTa9Zg5

— Evan Blass (@evleaks) December 10, 2025

Google Pixel 10a specifications leak
-6.3-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே

-டென்சர் G4 சிப்

-8GB ரேம் மற்றும் 128GB சேமிப்பு

-48MP முதன்மை கேமரா

-13MP முன் கேமரா

-5100mAh பேட்டரி

கசிந்த சில முக்கிய தகவலின் படி, இந்த தொலைபேசி 6.3 அங்குல FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும். இந்த டிஸ்ப்ளேவின் புதுப்பிப்பு வீதம் 60Hz முதல் 120Hz வரை இருக்கலாம். இது 2000 nits பிரகாசத்துடனும் வரலாம். கூடுதலாக, தொலைபேசியில் Tensor G4 சிப் இருக்கலாம், இது Google Pixel 9A இல் ஏற்கனவே உள்ளது. இந்த தொலைபேசியில் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பகம் இருக்ககூடும் என்று கூறப்படுகிறது.

புகைப்படம் எடுப்பதற்கு, இந்த தொலைபேசி இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 48MP முதன்மை கேமராவும், 13MP அல்ட்ரா-வைட் சென்சார் உடன் இருக்கலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, தொலைபேசியில் 13MP முன் கேமராவும் இருக்கலாம். இந்த தொலைபேசி 5100mAh வரை பேட்டரியை கொண்டிருக்கலாம்.

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.