Hockey Men's Junior WC: ஸ்பெயினை வீழ்த்தி 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்; இந்தியாவுக்கு வெண்கலம்!

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய 14-வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில், லீக் சுற்று போட்டிகள் முடிவில், ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

அடுத்ததாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.

அதைத்தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ஸ்பெயின் vs அர்ஜென்டினா, இந்தியா vs ஜெர்மனி அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின்
ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை – ஜெர்மனி vs ஸ்பெயின்

இதில், ஸ்பெயினும், ஜெர்மனியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில், சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஸ்பெயின் vs ஜெர்மனி இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணியளவில் தொடங்கியது.

ஆட்டத்தின் முதற்பாதியில் ஜெர்மனியும், இரண்டாம் பாதியில் ஸ்பெயினும் ஒவ்வொரு கோல் அடிக்க ஆட்டநேர முடிவில் 1 – 1 எனப் போட்டி சமனில் முடிந்தது.

இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட்-அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

இதில், முதல் வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறின. இரண்டாவது வாய்ப்பிலும் ஜெர்மனி கோல் அடிக்காமல் மிஸ் பண்ண, ஸ்பெயின் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின்
ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை – ஜெர்மனி vs ஸ்பெயின்

மூன்றாவது வாய்ப்பில் இது அப்படியே தலைகீழாக மாறியது, ஸ்பெயின் கோல் அடிக்காமல் மிஸ் பண்ண மறுபக்கம் ஜெர்மனி கோல் அடித்து சமநிலைக்கு வந்தது.

அடுத்து நான்காவது வாய்ப்பில் இரு அணிகளுமே கோல் அடிக்க 2 – 2 சமநிலை தொடர்ந்தது.

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின்
ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை – ஜெர்மனி vs ஸ்பெயின்

இறுதியில் சாம்பியனைத் தீர்மானிக்கும் கடைசி வாய்ப்பில் ஸ்பெயின் கோட்டைவிட ஜெர்மனி கோல் அடித்து 3 – 2 என வெற்றி வாகை சூடியது.

இது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில் ஜெர்மனி வெல்லும் 8-வது சாம்பியன் பட்டம்.

இப்போட்டிக்கு முன்பாக நடைபெற்ற 3-ம் இடத்துக்கான போட்டியில் இந்திய அணி 4 – 2 என அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.