இனி இந்த CSK வீரருக்கு இந்திய அணியில் இடமே கிடையாது.. அஸ்வின் பளிச்!

Sanju Samson availability Question In Indian Team: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்துள்ளன. டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியும் ஒருநாள் தொடரில் இந்திய அணியும் வென்ற நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 

Add Zee News as a Preferred Source

India vs South Africa T20: அணிக்குள் வந்த துணை கேப்டன் சுப்மன் கில் 

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இத்தொடரில் களமிறங்கி உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகி இருந்த சுப்மன் கில் இத்தொடருக்கு திரும்பி உள்ளார். இதனால் சஞ்சு சாம்சனை பெஞ்சில் அமர வைத்துள்ளனர். கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றாலும் 3 சதங்கள் அடித்து ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனை பிளேயிங் 11க்குள் கொண்டு வராதது ரசிகர்கள் இடையேயும் கிரிக்கெட் விமர்சகர்கள் இடையேயும் விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது. சுப்மன் கில் அணிக்குள் வந்ததால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக இல்லை என்றால் கூட விக்கெட் கீப்பராகவும் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு ஜிதேஷ் சர்மாவை தேர்வு செய்து சஞ்சு சாம்சனை பெஞ்சில் அமர வைத்தது இந்திய அணி நிர்வாகம்.

இது தொடர்பாக முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். சஞ்சு சாம்சனை பிளேயிங் 11க்குள் கொண்டு வராதது மிகப்பெரிய விவாதமாக நடந்துக்கொண்டிருக்கிறது. அவர் எப்போதெல்லாம் நீக்கப்படுகிறாரோ அப்போதெல்லாம் இதுபோன்ற கேள்விகள் வருவது வழக்கம்தான். சுப்மன் கில் எப்போது இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக வந்தாரோ அப்போதே பிளேயிங் 11ல் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகிவிட்டது. 

Why Jitesh Sharma instead of Sanju Samson: சஞ்சு சாம்சனுக்கு பதில் ஏன் ஜிதேஷ் சர்மா? 

சஞ்சு சாம்சனுக்கு 5வது இடத்தில் விளையாடி பெரிய அனுபவம் கிடையாது. அவர் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். தொடக்க வீரர் அல்லது ஒன் டவுனில் மட்டுமே அவர் அதிகமாக விளையாடி இருக்கிறார். ஆனால் ஜிதேஷ் சர்மாவின் கதை வேறு. அவர் ஆர்சிபி அணிக்காக நிறைய போட்டிகளில் ஃபினிஷராக செயல்பட்டிருக்கிறார். அவர் அடித்து ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்திய அணியின் தேவையும் அதுவாகவே உள்ளது. அதனாலேயே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுகாமல் ஜிதேஷ் சர்வாவுக்கு சென்றது இந்திய அணி. 

Sanju Samson Position In Indian Team: சஞ்சு சாம்சனை எங்கே களமிறக்கலாம்? 

சஞ்சு சாம்சனை ஆட வைக்க விரும்பும் பட்சத்தில் அவர் 3வது இடத்திற்கு கட்சிதமாக பொருந்துவார் என நினைக்கிறேன். அவர் சுழற்பந்து வீச்சை சிறப்பாக கையாள்பவர். எனவே அவரை 5வது இடத்தில் களமிறக்கி விணடிப்பதை விட 3வது இடத்தில் விளையாட வைக்கலாம். இவ்வாறு தனது யூடியூப் சேனலில் பேசினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.  

Sanju Samson vs Shubman Gill: சஞ்சு சாம்சன் vs சுப்மன் கில் 

இந்திய டி20 அணியின் துனை கேப்டனாக சுப்மன் கில் இருப்பதால் அவரது இடம் பாதுக்காப்பாக உள்ளது. ஆனால் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடும் அவர் தொடர்ந்து சொதப்பும் பட்சத்தில் அவரது இடத்திற்கு பிரச்சனை ஏற்படலாம். சுப்மன் கில் கடைசி 10 டி20 போட்டிகளில் ஒரு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட அவர் அரை சதம் எட்டவில்லை. இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் 40 ரன்களை கடந்திருக்கிறார். 

Shubman Gill Last 10 T20 Innings: சுப்மன் கில் கடைசி 10 போட்டிகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (டிசம்பர் 9, 2025) 4 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (நவம்பர் 8, 2025) 29 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (நவம்பர் 6, 2025) 46 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (நவம்பர் 2, 2025) 15 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (அக்டோபர் 31, 2025) 5 ரன்கள்,  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (அக்டோபர் 29, 2025) 37 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக (செப்டம்பர் 28, 2025 – ஆசிய கோப்பை) 12 ரன்கள், இலங்கைக்கு எதிராக (செப்டம்பர் 26, 2025 – ஆசிய கோப்பை) 4 ரன்கள், வங்கதேசத்திற்கு எதிராக (செப்டம்பர் 24, 2025 – ஆசிய கோப்பை) 29 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக (செப்டம்பர் 21, 2025 – ஆசிய கோப்பை) 47 ரன்கள் என மொத்தமாக 228 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.