Virat Kohli, Rohit Sharma Latest news: இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா. இவர்கள் இருவரும் மிக உயரிய பிரிவான ஏ பிளஸ் கிரேடில் உள்ளனர். ஆனால் பிசிசிஐ விதிகளின் படி, கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாடும் வீரர்கள் மாடுமே இந்த ஏ பிளஸ் பிரிவில் இருக்க முடியும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்தும் இந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்த நிலையில்தான் இருவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
Add Zee News as a Preferred Source
விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு சரிவு
வரும் டிசம்பர் 22ஆம் தேதி பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 2024 – 2025 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஒப்பந்த மாற்றம் குறித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருவதால், அவர்களை ஏ பிளஸ் (A+) பிரிவில் வைத்துக்கொள்ள பிசிசிஐ விரும்பவில்லை என தெரிகிறது. எனவே அவர்களை ஏ பிரிவு (A Grade) அல்லது அதற்கு கீழே இருக்கும் பி (B Grade) போன்ற பிரிவுகளுக்கு மாற்ற அதிக வாய்ப்புள்ளது.
அதே சமயம் தற்போது இந்திய அணியின் அனைத்து வடிவ கிரிக்கெட்டின் கேப்டனாக வளர்ந்து வரும் சுப்மன் கில் ஏ பிளஸ் பிரிவுக்கு முன்னேற உள்ளார் என்று தெரிகிறது. தற்போது ஏ பிரிவில் இருக்கும் கில்லுக்கு ஏ பிளஸ் பிரிவை கொடுத்து உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏ பிளஸ் கிரேட் (A+ Grade)
பிசிசிஐ=யின் ஏ+ பிரிவில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர். இந்த பிரிவில் ஜடேஜா மற்றும் பும்ரா நீடிப்பார்கள் என தெரிகிறது. அதேசமயம் ஏ கிரேடில் இருக்கும் கில் ஏ + கிரேடுக்கு மாற்றப்படுவார் என கூறப்படுகிறது.
ஏ கிரேட் (A Grade)
இந்த பிரிவில் முகமது சிராஜ், கே.எல். ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், முகமது ஷமி ஆகியோர் உள்ளனர். இதில் முகமது ஷமியை கீழ் பிரிவுகளுக்கு மாற்ற வாய்ப்பிருக்கிறது. அதேபோல் பி கிரேடில் இருக்கும் குல்தீப் யாதவ், அக்சர் படேல் போன்ற சில ஏ கிரேடுக்கு மாற்ற அதிக வாய்ப்புள்ளது.
பி பிரிவில் இருக்கும் வீரர்கள் (B Grade)
பி பிரிவில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளனர். இதில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒரு ஃபார்மட்டில் மட்டும் விளையாடுவதால், இவர்கள் இதே பிரிவில் நீடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி பிரிவு (C Grade)
இந்த பிரிவில் இதர வீரர்களான ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரவி பிஸ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் பட்டிதர், துருவ் ஜுரேல், சர்ஃப்ராஸ் கான், நிதீஷ் குமார், இஷான் கிஷான், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, ஷர்ஷித் ராணா ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் பி கிரேடுக்கு உயர்த்த வாய்ப்பிருக்கிறது.
About the Author
R Balaji