சிஎஸ்கே வீரருக்கு அடிக்கப்போகும் ஜாக்பார்ட்! குறிவைத்து தூக்கும் கேகேஆர் அணி!

2025 ஐபிஎல் சீசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட பிறகு, 2026 சீசனுக்காக அணியை முழுமையாக மாற்றியமைக்க KKR நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் போன்ற மூத்த வீரர்களை விடுவித்ததன் மூலம், ரூ.64.3 கோடி என்ற இமாலய தொகையுடன் ஏல களத்தில் குதிக்கிறது கொல்கத்தா. மொத்தம் 13 இடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள KKR அணி, குறிப்பாக 5 வீரர்களை குறிவைக்க வாய்ப்புள்ளது. அதில் ஒரு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும் உள்ளார். கையிருப்பில் அதிகப்படியான பணம் இருப்பதால், ஏலத்தில் எந்த ஒரு பெரிய வீரரையும் வாங்கும் சக்தி KKRக்கு உண்டு. கடந்த சீசனில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, ஒரு சமநிலையான மற்றும் வலுவான அணியை உருவாக்குவதே நிர்வாகத்தின் முக்கிய நோக்கம்.

Add Zee News as a Preferred Source

மதீஷா பதிரானா (Matheesha Pathirana)

சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா, KKRன் முதன்மை இலக்காக இருக்கலாம். மலிங்காவை போன்ற இவரது பந்துவீச்சு முறை, டெத் ஓவர்களில் எதிரணியை திணறடிக்க வல்லது. கடந்த சீசனில் 12 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய இவரை, அணியின் வேகப்பந்து வீச்சுக்கு வலுசேர்க்க KKR நிச்சயம் குறிவைக்கும்.

ஃபின் ஆலன் (Finn Allen)

நியூசிலாந்தின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன். டி20 போட்டிகளில் 168.60 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் இவர், குயின்டன் டி காக்கிற்கு பதிலாக சரியான மாற்றாக இருப்பார். பவர் பிளே ஓவர்களில் சிக்ஸர் மழை பொழியும் இவரது ஆட்டம், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்கு பெரிதும் உதவும்.

ஜேமி ஸ்மித் (Jamie Smith)

இங்கிலாந்தின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித். குர்பாஸ் மற்றும் டி காக் விடுவிக்கப்பட்டதால், ஒரு நிலையான விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் KKR-க்குத் தேவை. அதிரடியாக ஆடக்கூடிய ஜேமி ஸ்மித் அந்த இடத்திற்கு பொருத்தமானவர். சமீபத்தில் ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

தனுஷ் கோட்டியன் (Tanush Kotian)

மும்பையை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் தனுஷ் கோட்டியன். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், பேட்டிங்கிலும் கை கொடுக்கக்கூடியவர். குறைவான விலையில் ஒரு சிறந்த இந்திய ஆல்-ரவுண்டராக இவர் அமைவார். அஷ்வினுக்கு மாற்று வீரராக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

சிவம் மாவி (Shivam Mavi)

ஏற்கனவே KKR அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர் சிவம் மாவி. காயம் காரணமாகச் சில காலம் ஒதுங்கியிருந்தாலும், தற்போது ரஞ்சி டிராபி மற்றும் UPT20 லீக்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒரு சிறந்த இந்தியப் பந்துவீச்சு மாற்றாக இவரை மீண்டும் அணிக்கு கொண்டுவர KKR திட்டமிடலாம்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.