சீனாவில் தீ விபத்து; 12 பேர் பலி

குவாங்சவ்,

சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டத்தின் சாந்தவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், தீ மளமளவென பரவியது. 150 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளுக்கு தீ பரவியது. இதில் சிக்கி 12 பேர் பலியானார்கள்.

40 நிமிடங்களுக்கு பின்னர் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் வரலாறு காணாத அளவுக்கு எற்பட்ட தீ விபத்தில் சிக்கி 140-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 75 ஆண்டுகளில் இல்லாத அழிவை அந்நகரம் சந்தித்து இருந்தது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.