புதுடெல்லி,
கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 11-ம் தேதி) கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.. அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.