சென்னையில் நடத்தப்பட்ட ஆறு வருட ஆய்வு ஒன்றில், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் அடைப்பான அக்யூட் கரோனரி சிண்ட்ரோம் (ACS) எனும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் இதய பாதிப்புகள், 18 வயதுடைய இளம் வயதினரிடையே வேகமாக அதிகரித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர்கள் குழுவால் ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு குறித்து, கடந்த மாதம் […]