சென்னை: தமிழகத்தில் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி, சுமார் 3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார். சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம்-2025 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்று எச்ஐவி-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள், விழிப்புணர்வு குறும்படத்துக்கான குறுந்தகடை […]