Mahadhan Rajyog 2025: ஜோத்திடத்தின்படி, சூரிய கிரகம் சிம்ம ராசியின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் 1 மாத காலம் பயணிப்பவர். ஒரு சுழற்சியை முடிக்க ஓராண்டாகும். மேலும், சூரியனின் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இம்மாதம் 16ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழைய இருக்கிறார். சூரியன் சுமார் 1 ஆண்டுக்கு பின்னர் இந்த ராசிக்கு வர இருக்கிறார். அதேசமயம் ஏற்கனவே இந்த ராசியில் செவ்வாய் பயணித்து வருகிறார். இதன் காரனமாக தனுசு ராசியில் மங்கள ஆதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது.
Add Zee News as a Preferred Source
சூரியனின் இந்த பெயர்ச்சியால் மகாதன ராஜயோகமும் உருவாக இருக்கிறது. இந்த யோகத்தால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படும். அதிலும் குறிப்பாக 3 ராசிக்காரகளுக்கு மாடும் அதிக அளவிலான நன்மைகள் கிடைக்க இருக்கின்றன. இந்த நிலையில், அந்த ராசிக்காரர்கள் யார் யார்? எப்படியான அதிர்ஷ்டத்தை பெற இருக்கின்றனர் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷம் (Aries)
மகாதன ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெற இருக்கின்றனர். இந்த ராசியின் 9வது வீட்டிற்கு சூரிய செல்கிறார். இதனால் அதிர்ஷ்டம் அதிகரித்து வெற்றிகள் குவியும். நல்ல செய்திகள் வரும். தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். நிதி நிலைமை மேம்படும். கூடுதலாக வருமாணம் பெற புதிய வழிகள் பிறக்கும். வணிகம் செய்பவர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தை பெறுவார்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிறப்பாகவும் இருக்கும். மேலும், எந்த வேலை செய்தாலும் வெற்றிகள் கிடைக்கும்.
விருச்சிகம் (Scorpio)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகாதன ராஜயோகத்தால் நல்ல பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அரசு தேர்வுகளில் எழுதி இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் நல்லபடியாக முடிவடையும். புதிய வருமானத்தை உருவாக்க வழிகள் பிறக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.
கும்பம் (Aquarius)
மகாதன ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்க இருக்கின்றன. பணவரவு அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் சரியாகும் . துணையுடனான உறவு மேம்படும். ஆரோக்கியத்தில் குறைப்பாடு இருக்காது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
About the Author
R Balaji