Lionel Messi: ராகுல் காந்திக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட் – வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, ‘G.O.A.T. Tour’ (Greatest Of All Time Tour) என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் ரசிகர்களைச் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டது.

அதன் ஒருபகுதியாக மெஸ்ஸி நேற்று (13-ம் தேதி) ஹைதராபாத் வந்தடைந்தார். உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பல புகைப்பட நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அங்கு கால்பந்து விளையாடினார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்களையும் சந்தித்தார்.

இந்த நிகழ்வில் லியோனல் மெஸ்ஸி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்தார். அப்போது மெஸ்ஸி, ராகுல் காந்திக்கு ‘GOATED 10’ என்ற எண் கொண்ட ஜெர்சியை பரிசளித்தார். அதைத் தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் உரையாற்றினர்

கொல்கத்தாவைப் போல இந்த மைதானத்திலும் மெஸ்ஸியை ரசிகர்களால் அருகில் பார்க்கமுடியாத சூழலே நிலவியது. அதனால், ஆயிரக்கணக்கான ரூபாயை செலவு செய்து மெஸ்ஸியைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.