கேமரூன் கிரீன் 25.20 கோடிக்கு ஏலம் போனாலும் 18 கோடி தான் கிடைக்கும்! ஏன் தெரியுமா?

ஐபிஎல் 2026-க்கான மினி ஏலம் இன்று டிசம்பர் 16 அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் (Cameron Green), எந்த அணிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் மினி ஏலத்தில் ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் வாங்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. ரூ.25.20 கோடிக்கு கிரீன் ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் 18 கோடி தான் அவருக்கு கிடைக்கும். மீதமுள்ள பணத்தை பிசிசிஐ எடுத்துக்கொள்ளும்.

Add Zee News as a Preferred Source

#IPL2026Auction | கேமரூன் கிரீனை ரூ.25.2 கோடிக்கு ஏலம் எடுத்த KKR#IPL2026 | #IPLAuction | #IPL2026Auction | #CameronGreen | #KKR | #ZeeTamilNews pic.twitter.com/Tpqw67MSDx

— Zee Tamil News (@ZeeTamilNews) December 16, 2025

கேமரூன் கிரீன் ஏன் இந்த மவுசு?

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர், எந்த இடத்திலும் இறங்கி அதிரடியாக ஆடக்கூடியவர். 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 17.5 கோடிக்கு வாங்கப்பட்டார். பின்னர் 2024ல் பெங்களூரு அணிக்கு மாற்றப்பட்டார். இதுவரை 29 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 707 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 153.70) குவித்துள்ளார். பந்துவீச்சிலும் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். நீண்ட நாட்களாக காயத்தில் இருந்தே கிரீன் தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் வெளிநாட்டு வீரர்களில் அதிக விலைக்கு போன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கேமரூன் கிரீன்.

விலைபோகாத வீரர்கள்
தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரை அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்
ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் ஃபெரேசர் மெக்கர்க் ஏலம் போகவில்லை
நியூசிலாந்து வீரர் டென் கான்வே மற்றும் இந்திய வீரர் பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை
SMAT தொடரில் அதிரடி காட்டி வரும் சர்பராஸ் கானும் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.