சென்னை: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை பிரச்சித்தி பெற்ற வேலூர் பொற்கோயிலுக்கு வருகை தருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நாளை (டிச.17) தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேலூர் பொற்கோவிலில் வழிபாடு நடத்தவுள்ளார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு வேலூர், ஸ்ரீபுரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் டிசம்பர் டிசம்பர் 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, […]