சென்னை: தமிழ்நாட்டில், ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வருகிறபோது, மாதம் ஒரு முறை மின்கட்டணம் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு இதுவரை செயல்படுத்த வில்லை. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வருகிறபோது, தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதற்கு அது வசதியாக இருக்கும் என […]