டாஸ் கூட போடாமல் இந்தியா – தென் ஆப்பிரிக்கா போட்டி ரத்து! ஏன் தெரியுமா?

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி, கடும் பனிமூட்டம் மற்றும் மோசமான Poor Visibility காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணிக்கு இது ஒரு சிறிய ஏமாற்றமாக அமைந்தாலும், ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது. போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்த நிலையில், இயற்கையின் குறுக்கீடு ஆட்டத்தை முற்றிலுமாக முடக்கியது.

Add Zee News as a Preferred Source

The fourth T20I between India and South Africa in Lucknow has been abandoned due to excessive fog. #INDvSA #Lucknow pic.twitter.com/ONGSNAWIPL

— Cricbuzz (@cricbuzz) December 17, 2025

கடும் பனி மூட்டம்

போட்டி தொடங்கும் முன்னரே மைதானம் முழுவதும் அடர்த்தியான பனி படர்ந்திருந்தது. இதனால் திட்டமிட்டபடி மாலை 6:30 மணிக்கு டாஸ் போட முடியவில்லை. முதல் கட்ட ஆய்விற்காக நடுவர்கள் 6:50 மணிக்கு வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. நிலைமை சீரடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பனிமூட்டம் மேலும் அதிகரித்தது. நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்தபோது, மைதானத்தின் எதிர் திசையில் உள்ள ஸ்டாண்ட் கூட தெரியாத அளவுக்கு பனி அடர்த்தியாக இருந்தது. மீண்டும் ஒருமுறை நடுவர்கள் ஆய்வு செய்தும், பார்வை திறனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஃப்ளட் லைட்கள் எரிந்தும் பனிப்புகையால் மைதானம் தெளிவாக தெரியவில்லை. வீரர்கள் பாதுகாப்பு கருதி போட்டியை தொடங்குவதில் சிக்கல் நீடித்தது. இறுதியாக, நிலைமை மாறுவதாக தெரியவில்லை. இரவு 9:30 மணிக்கு பிறகும் பனிமூட்டம் குறையாததால், டாஸ் கூடப் போட முடியாத சூழல் உருவானது. இதனால் போட்டி அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பிசிசிஐ மீதான விமர்சனம்

டிசம்பர் மாதத்தில் வட இந்தியாவில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு இருப்பது வழக்கம். அப்படி இருக்கையில், லக்னோ போன்ற ஒரு நகரில் இரவு நேர போட்டியை அட்டவணைப்படுத்தியது ஏன் என்று ரசிகர்கள் பிசிசிஐயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில், “இது மோசமான திட்டமிடல்” என்று பலர் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் 2 போட்டியில் இந்தியாவும், ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது போட்டி ரத்து செய்யப்பட்டதால், அகமதாபாத்தில் நடைபெறவுள்ள கடைசி மற்றும் 5வது டி20 போட்டி தான் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும். ஒருவேளை கடைசி போட்டியில் இந்தியா வென்றால் தொடரைக் கைப்பற்றும். தென்னாப்பிரிக்கா வென்றால் தொடர் 2-2 என சமனில் முடியும்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.