சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அமுதம் அங்காடி உள்பட பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்தார் . கொளத்தூரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ரூ.25.72 கோடியில் குளிர்சாதன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை, ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி […]