கராச்சி,
16-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் பாகிஸ்தான் அணி ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பர்ஹான் யூசுப் தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணி விவரம்: பர்ஹான் யூசப் (கேப்டன்), உஸ்மான் கான் (துணை கேப்டன்), அப்துல் சுபான், அகமது ஹுசைன், அலி ஹசன் பலோச், அலி ரசா, டேனியல் அலி கான், ஹம்சா ஜாஹூர், ஹுசைபா அஹ்சன், மொமின் கமர், முகமது சயாம், முகமது ஷயான், நிகாப் ஷபிக், சமீர் மின்ஹாஸ், உமர் சைப்.