இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது ஆட்டத்தில் மட்டுமல்லாமல், உடல் தகுதி மற்றும் தோற்றத்திலும் பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். களத்தில் எத்தனை மணி நேரம் வெயிலில் நின்றாலும், அவரது சருமமும் முடியும் எப்போதும் ஆரோக்கியமாகவே காட்சியளிக்கின்றன. இதற்கான ரகசியம் என்னவென்று பலரும் தேடி வரும் நிலையில், விராட் கோலியின் பிரபல டயட்டீஷியனான ரியான் பெர்னாண்டோ, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் 5 முக்கிய உணவுகளை பட்டியலிட்டுள்ளார்.
Add Zee News as a Preferred Source
முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி
இன்று பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை முடி உதிர்வு. மன அழுத்தம், மாசு மற்றும் தவறான உணவு பழக்கம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும். விலையுயர்ந்த ஷாம்பூ மற்றும் எண்ணெய்களை பயன்படுத்துவதை விட, நாம் உண்ணும் உணவில் தான் உண்மையான தீர்வு இருக்கிறது என்கிறார் ரியான். விராட் கோலி போன்ற விளையாட்டு வீரர்கள் பின்பற்றும் உணவு முறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 ‘சூப்பர் உணவுகள்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முருங்கை: நம்ம ஊரு முருங்கை கீரை ஒரு சத்துக்களின் சுரங்கம். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வை தடுக்கவும் முருங்கை பெரிதும் உதவுகிறது. விராட் கோலி பெரும்பாலும் தாவர அடிப்படையிலான உணவுகளை உண்பதால், முருங்கை அவரது டயட்டில் முக்கிய இடம் பிடிக்கிறது.
ஆளி விதைகள்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளி விதைகள், தலைமுடிக்குத் தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. இது தலை வறட்சியைத் தடுத்து, பொடுகுத் தொல்லையை குறைக்கிறது. ரியான் பெர்னாண்டோ, இந்த விதைகளை ஸ்மூத்திகள் அல்லது சாலட்களில் சேர்த்துச் சாப்பிட பரிந்துரைக்கிறார்.
பூசணி விதைகள்: ஆண்கள் சந்திக்கும் வழுக்கை பிரச்சினைக்கு துத்தநாக குறைபாடு ஒரு முக்கிய காரணம். பூசணி விதைகளில் ஜிங்க் சத்து அதிகமாக உள்ளது. இது புதிய செல்கள் உருாவதை ஊக்குவித்து, முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
கீரை வகைகள்: பசலை கீரை மற்றும் பிற கீரை வகைகளில் ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடிக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது. விராட் கோலியின் உணவில் எப்போதும் வேகவைத்த காய்கறிகள் மற்றும் கீரைகள் இருப்பதை நாம் பார்த்திருப்போம்.

பெர்ரி பழங்கள் மற்றும் நெல்லிக்காய்
வைட்டமின் சி குறைபாடு இருந்தால் முடி உடைந்து போகும். நெல்லிக்காய் மற்றும் பெர்ரி பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கொலாஜன் உற்பத்தியை தூண்டி, முடியை உறுதியாக்குகிறது. நரைமுடி வருவதை தாமதப்படுத்தவும் இவை உதவுகின்றன.
ரியான் பெர்னாண்டோவின் அட்வைஸ்
விலையுயர்ந்த சிகிச்சைகளை விட, உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த எளிய உணவுகள் தான் உங்கள் முடியின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. விராட் கோலி போன்ற ஃபிட்னஸ் ஐகான்கள், சரியான உணவின் மூலம் தான் தங்கள் ஆரோக்கியத்தை தக்கவைத்து கொள்கிறார்கள். நீங்களும் இந்த 5 உணவுகளை உங்கள் அன்றாட வாழ்வில் சேர்த்து கொண்டால், சில வாரங்களிலேயே மாற்றத்தை உணரலாம்” என்று ரியான் தெரிவித்துள்ளார்.
About the Author
RK Spark