விராட் கோலி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ.. “இப்படி செஞ்சிருக்க வேண்டாம்”.. ஷாக்!

Virat Kohli Viral Video: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடினார். 2 சதம், 1 அரை சதம் என மொத்தமாக அத்தொடரில் 302 ரன்களை குவித்து அசத்தினார். இந்த நிலையில், விராட் கோலி செய்த செயல் காரணமாக இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். அவருடன் சேர்த்து அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவையும் ட்ரோல் செய்து வருகின்றன்ர் நெட்டிசன்கள். 

Add Zee News as a Preferred Source

Virat Kohli & Anushka Sharma: மாற்றுத்திறனாளியை கண்டுகொள்ளாத விராட் கோலி, அனுஷ்கா சர்மா

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துக்கொண்டிருந்தனர். முன்னே விராட் கோலி வர அவர் பின்னர் அனுஷ்கா சர்மா வந்தார். அப்போது, மாற்றுத்திறனாளி ஒருவர் விராட் கோலியிடம் செல்பி எடுக்க முயன்று அவரிடம் கேட்டார். ஆனால் விராட் கோலி அவரை சிறிதும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். அவர் பின்னர் வந்த அனுஷ்கா சர்மாவும் மாற்றுத்திறனாளியை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து பாதுகாவலர்கள் அந்த மாற்றுத்திறனாளியை இழுத்து சென்றனர். இதனை வீடியோவாக எடுத்த சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வீடியோவானது வேகமாக பரவி வருகிறது. 

इसमें कोई संदेह नहीं है की #ViratKohli दुनियां के बेहतरीन खिलाड़ियों में से एक हैँ, लेकिन इंसान बेहतरीन होना ज्यादा सार्थक है, इस बच्चे के एक फोटो देने में आपको शायद 10 सेकंड भी नहीं लगते, लेकिन ये तस्वीर उस बच्चे के लिए क्या होती वो आप भी जानते हैँ pic.twitter.com/omG33eVHlW

— Singh is here (@Singhhagain) December 17, 2025

Virat Kohli Viral Video: ஒரு சம்பவத்தை வைத்து மதிப்பிட வேண்டாம்

இதனால் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் ட்ரோலுக்கு உள்ளாகி உள்ளனர். பலரும் விராட் கோலிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவர், அவர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராஃப் போடுவதில் சோர்வடைந்து விட்டனர். இருப்பினும் பாதுகாவர்கள் மாற்றுத்திறனாளியை இழுத்து செல்லும் நிலையில், அதனை தடுத்திருக்கலாம். அதை செய்யாதது வருத்தமே என கூறி உள்ளார். 

மறுபக்கம் சிலர் விராட் கோலிக்கு எதிராக பேசி வருகின்றனர். அதேவேளையில் விராட் கோலியின் ரசிகர்கள் அவரது பழைய வீடியோக்களை பகிர்ந்து, இந்த ஒரு சம்பவத்தை வைத்து அவரை மதிப்பிட வேண்டாம் என்று முன்பு விராட் கோலி மாற்றுத்திறனாளி ரசிகரிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டதை பகிர்ந்து ஆதரவாக பேசி வருகின்றனர். 

Virat Kohli Latest News: விராட் கோலி

விராட் கோலி, தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை இந்திய அணியில் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். அதுவே அவரது ரசிகர்களின் ஆசையாகவும் இருக்கிறது. இதுவரை 308 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர், 14557 ரன்களை குவித்துள்ளார். இதில் 53 சதங்கள் மற்றும் 76 அரைசதங்களும் அடங்கும். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 84 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.