CSK வீரரை வாங்க துடித்த ரிஷப் பண்ட்.. யார் தெரியுமா? சுவாரஸ்யம் பகிர்ந்த LSG ஓனர்!

19வது ஐபிஎல் சீசன் 2026 அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் (டிசம்பர் 16) ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த ஏலத்தில் 77 வீரர்களை அனைத்து அணிகளும் ஏலத்தின் முறையில் வாங்கி உள்ளனர். முக்கிய நட்சத்திர வீரர்கள் நல்ல தொகைக்கு இடம் மாறி உள்ளனர். சில வீரர்களை எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வாங்கவில்லை என்றாலும் ஏலம் மிகவும் விறுவிறுப்பாகவே சென்றது. 

Add Zee News as a Preferred Source

Sanjiv Goenka: LSG ஓனர் சஞ்சீவ் கோயங்கா 

உதாரணத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட மதீஷா பதிரானாவை மீண்டும் சென்னை அணியே எடுத்துக்கொள்ளும் என்றும் சில அணிகளும் அவருக்கு போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை ரூ. 18 கோடி என்ற மிகப்பெரிய விலைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. இது கேகேஆர் அணியின் பந்து வீச்சில் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தில் மதீஷா பதிரானவை வாங்கா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் ஆசைபட்டதாக அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பகிர்ந்துள்ளார். 

Rishabh Pant Demanded To Buy Pathirana: பதிரானவை வாங்க அசைப்பட்ட ரிஷப் பண்ட் 

இது தொடர்பாக அவர் கூறியதாவது, எங்கள் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் துணை கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் பதிரானாவை வாங்க மிகவும் ஆசைப்பட்டனர். இந்த மினி ஏலத்தில் அவரை நான் வாங்கி விட வேண்டும் என விரும்பினார்கள். நானும் அவரை வாங்க ஆர்வமாக இருந்தேன். அதனால்தான் ஏலத்தின்போது பதிரானாவை எடுக்க அவ்வளவு முயற்சித்தேன். ஆனால் எங்களிடம் போதுமான தொகை இல்லை. ரூ. 17.80 கோடி மட்டுமே எங்களிடம் இருந்தது. இதன் காரணமாக அவரை வாங்க முடியாமல் போனது. 

Anrich Nortje & Wanindu Hasaranga: உலக தரம் வாய்ந்த பவுலர்கள் 

ஆண்ரிச் நோர்க்கியாவை வாங்கும் திட்டத்தில் நாங்கள் இருந்தோம். அதேபோல் அவரை வாங்கிவிட்டோம். அவரை எங்கள் அணிக்கு கொண்டு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைக்கிறோம். அதேபோல் ஒரு உலக தரம் வாய்ந்த லெக் ஸ்பின்னரை எடுக்க வேண்டும் என நினைத்தோம். அதற்கு வனிந்து ஹசரங்காவை தேர்வு செய்து எடுத்துள்ளோம் என அவர் கூறினார். 

Former CSK Player Matheesha Pathirana: ரூ. 18 கோடிக்கு ஏலம் போன மதீஷா பதிரானா 

மதீஷா பதிரானா கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அவர் அந்த அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார். இருப்பினும் சிஎஸ்கே அணி அவரை கழற்றிவிட்டது. இந்த நிலையில், மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்டிப்போட்டு அவரை ரூ. 18 கோடிக்கு வாங்குயது. பதிரானா இதுவரை 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்களை கைபற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.