துபாய்,
மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஐக்கிய அரசு அமீரகம். இந்நாட்டின் துபாய், அபுதாபியில் இன்று அதிகாலை கனமழை பெய்தது.
கனமழை காரணமாக துபாய், அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று காலை வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அதேபோல், கனமழையால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
Related Tags :