சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு என்பவர் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி, வழக்கு தாக்கல் […]