ஒரே ஒரு மேட்ச்தான்.. CSK வீரர் சம்பவம்.. கில்லின் டி20 கேரியருக்கே அப்பு! முழு விவரம்

Sanju Samson Latest News: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடிய நிலையில், இரு அணிகளும் இறுதியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்திய அணி 3-1 என்ற கண்க்கில் தொடரை வென்றது. இந்த நிலையில்தான். டி20 தொடரின் கடைசி போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சஞ்சு சாம்சன் இந்திய நிர்வாகத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

Shubman Gill: தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்  

அதாவது டி20 அணியில் சுப்மன் கில் மீண்டும் நுழைந்ததில் இருந்தே பிளேஇங் 11 சஞ்சு சாம்சனின் இடம் சந்தேகமாகிவிட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இத்தொடரிலும் கூட சுப்மன் கில்லே பிளேயிங் 11ல் இருந்து வந்தார். ஆனால் சுப்மன் கில்லின் ஆட்டம் மிகவும் மோசமானதாக இருத்ந்து. இருப்பினும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட 5வது டி20 போட்டிக்கூட ஒரு ரிஸ்க் இல்லாத போட்டிதான். இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனால் 5வது டி20 போட்டியில் தோல்வியடைந்தாலும் தொடரை இழக்க வேண்டிய சூழல் ஏற்படாது. தொடர் சமன் என்ற நிலையே ஏற்படும். 

Shubman Gill vs Sanju Samson: ஒரே போட்ட்யில் முடித்துவிட்ட சஞ்சு சாம்சன் 

முதல் மூன்று போட்டியில் விளையாடிய சுப்மன் கில் கடுமையாக சொதப்பினார். அவர் வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் மிகவும் குறைவாக 103..22 ஆகும். பவர் ப்ளே-வில் அதிரடி காட்ட வேண்டிய அவர், ஆமை வேகத்தில் செயல்பட்டு தடுமாறியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த சூழலில், 4வது டி20 போட்டி பணிமூட்டத்தால் ரத்தான நிலையில், 5வது போட்டிக்கு முன்பாக கில்லுக்கு லேசான காயம் ஏற்பட்டதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கிய் சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இதன் மூலம் சுப்மன் கில் மூன்று போட்டிகளில் சேர்த்த 32 ரன்களை, சஞ்சு சாம்சன் ஒரே போட்டியில் தகர்த்தார். அவர் 22 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 168.18 ஆகும். 

Shubman Gill vs Sanju Samson: சுப்மன் கில்லின் டி20 கேரியருக்கே அப்பு

2026 டி20 உலகக் கோப்பை நெருங்கி வருகிறது. இந்த வேளையில் சஞ்சு சாம்சனின் இந்த அதிரடி சுப்மன் கில்லுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லின் அணுகுமுறை சரி இல்லை என்றும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி வீரரை கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகரக்ள் தெரிவித்து வருகின்றனர். மேலும், நேற்றைய போட்டிக்கு பிறகு 2026 டி20 உலகக் கோப்பைக்கு சஞ்சு சாம்சனே சிறந்த தொடக்க வீரராக இருப்பார் என்றும் ஆதரவு குரல்கள் வலுக்க தொடங்கி இருக்கிறது.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.