சென்னை: சென்னையில் வரும் 22ந்தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, வடசென்னையின் மணலி, திருவொற்றியூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வடசென்னை வளர்ச்சி திட்டப்பணியின் கீழ், மணலி காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவொற்றியூர் நீருந்து நிலையத்தில் 1 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, அந்நிலையத்தின் […]