பெங்களூரு,
அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், ‘புளூ பேர்ட்’ செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.
இந்த செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, வரும், டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, ‘புளூ பேர்ட்’ செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இம்மாதம் 15, 21ம் தேதிகளில், ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“இன்றைய கிட்டத்தட்ட ஆறு பில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் டவர் பிரச்சினை நீக்குவதற்கும், பில்லியன் கணக்கானவர்களுக்கு பிராட்பேண்டைக் கொண்டுவருவதற்கும் நாங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று இஸ்ரோ நிறுவனம் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
இஸ்ரோவால் சமீபத்தில் ஏவப்பட்ட LVM3-M5/CMS-03 பயணத்தில் தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் நவம்பர் 2, 2025 அன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.