IND W vs SL W முதல் டி20 போட்டி: எப்போது, எதில் பார்க்கலாம் – முழு விவரம்!

India Women vs Sri Lanka Women T20 series: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன் பின்னர் எந்த போட்டிகளில் விளையாட இந்திய அணி தற்போது இலங்கை அணியுடன் மோத இருக்கிறது. அந்த அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இப்போது முதல் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு கவனம் செலுத்துகிறது. 

Add Zee News as a Preferred Source

India women vs Sri Lanka women schedule: போட்டி விவரம் 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டி இன்று (டிசம்பர் 21) நடைபெறுகிறது. இதையடுத்து 23, 26, 28 மற்றும் 30ஆம் தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று நடக்கும் முதல் போட்டி விஷாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி சரியாக 6.30 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 7 மணிக்கு போட்டியானது தொடங்கும். 

India vs Sri Lanka women Live Stream: எதில் பார்க்கலாம் 

இந்தியா – இலங்கை டி20 தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்திலும் காணலாம். 

இந்தியா – இலங்கை அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் 

இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விக்கெட் கீப்பர் கமலினி, சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் மீண்டும் ரேணுகா தாக்கூர் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியை பலப்படுத்தி இருக்கின்றனர். 

மறுபுறம் சாமரி அட்டபட்டு தலைமையில் களமிறங்கும் இலங்கை அணியில் நிமேஷா மதுஷானிக்கு முதல் முறையாக அணிக்குள் வந்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர் ஷஷினி கிம்ஹானி மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். 

இரு அணிகளின் விவரம்

இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), சினே ராணா, அமன்ஜோத் கவுர், கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்கூர், ஸ்ரீ சரணி, அருந்ததி ரெட்டி, வைஷ்ணவி ஷர்மா, ஜி.

இலங்கை மகளிர் அணி: விஷ்மி குணரத்ன, சாமரி அதபத்து(கேப்டன்), ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, கௌஷானி நுத்யங்கனா(விக்கெட் கீப்பர்), ரஷ்மிகா செவ்வந்தி, இமேஷா துலானி, காவ்யா கவிந்தி, நிமேஷா மதுஷானி, இன்யோ, மல்கி ரஹானி, ஷேனாவீரா கிம்ஹானி. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.