தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று, 2025ம் ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது இந்திய அணி. இப்போது ரசிகர்களின் முழு கவனமும் பிப்ரவரி 2026ல் இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பையின் மீது திரும்பியுள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி, தனது சொந்த மண்ணில் மீண்டும் மகுடம் சூட காத்திருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, நியூசிலாந்து அணியுடன் இந்தியா மோதவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு சரியாக ஒரு மாதம் முன்பு, அதாவது ஜனவரி 2026ல் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இது இந்திய அணிக்கு சரியான பயிற்சி களமாக அமையும்.
Add Zee News as a Preferred Source
A monumental day on the road to ICC Men’s #T20WorldCup 2026
Behind the scenes from #TeamIndia’s squad selection meeting and press conference, ft. Captain Surya Kumar Yadav. #MenInBlue | @surya_14kumar pic.twitter.com/7h9yFPyZKa
— BCCI (@BCCI) December 20, 2025
இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர்
1. ஜனவரி 11: முதல் ஒருநாள் போட்டி – வதோதரா.
2. ஜனவரி 14: இரண்டாவது ஒருநாள் போட்டி – ராஜ்கோட்.
3. ஜனவரி 18: மூன்றாவது ஒருநாள் போட்டி – இந்தூர்.
இந்தியா – நியூசிலாந்து டி20 தொடர்
1. ஜனவரி 21: முதல் டி20 – நாக்பூர்.
2. ஜனவரி 23: இரண்டாவது டி20 – ராய்ப்பூர்.
3. ஜனவரி 25: மூன்றாவது டி20 – கவுகாத்தி.
4. ஜனவரி 28: நான்காவது டி20 – விசாகப்பட்டினம்.
5. ஜனவரி 31: ஐந்தாவது டி20 – திருவனந்தபுரம்.
டி20 உலகக்கோப்பை 2026 இந்தியாவின் அட்டவணை
பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும் இந்த உலகக்கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. குரூப் ‘A’-வில் பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் போட்டிகள்
பிப்ரவரி 7: இந்தியா Vs அமெரிக்கா – வான்கடே ஸ்டேடியம், மும்பை (இரவு 7:00 மணி).
பிப்ரவரி 12: இந்தியா Vs நமீபியா – அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி (இரவு 7:00 மணி).
பிப்ரவரி 15: இந்தியா Vs பாகிஸ்தான் – ஆர். பிரேமதாசா ஸ்டேடியம், கொழும்பு (இரவு 7:00 மணி).
பிப்ரவரி 18: இந்தியா Vs நெதர்லாந்து – நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் (இரவு 7:00 மணி).
சூப்பர் 8 மற்றும் இறுதிப்போட்டி
குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால், இந்தியா ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெறும். பிப்ரவரி 21 முதல் இந்த சுற்று தொடங்கும். அரையிறுதி போட்டிகள் மார்ச் 4 மற்றும் 5ம் தேதிகளிலும், மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 8ம் தேதி அகமதாபாத்திலும் நடைபெறும். சொந்த மண்ணில் உலகக்கோப்பை என்பதால் சூர்யகுமார் தலைமையிலான இந்திய படை கோப்பையை தக்கவைக்க கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (VC), இஷான் கிஷன் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
About the Author
RK Spark