உன்னுடன் வந்து விடுகிறேன்… முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

பாராபங்கி,

உத்தர பிரதேசத்தின் ஜலால்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அலோக் வர்மா (வயது 27). இவர் ராதே நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணியாகியும் அறையின் கதவு திறக்கப்படவில்லை. உள்ளே மொபைல் போனின் அழைப்பு மணி தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது. இதனை கவனித்த ஊழியர் கதவை பல முறை தட்டியும், அவரை அழைத்தும் இருக்கிறார்.

ஆனால், பதில் எதுவும் வரவில்லை. இதுதொடர்பாக ஓட்டல் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வந்து கதவை திறந்து பார்த்தபோது, மின் விசிறியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடந்தது. அதில், வர்மாவின் முதல் மனைவி மரணம் அடைந்து விட்டார். இதனால் வர்மா மறுமணம் செய்திருக்கிறார்.

எப்போதும் போல் நடந்து கொண்டிருக்கிறார். இதனால் சந்தேகம் எழவில்லை. இந்நிலையில் அவர், முதல்-மனைவியுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்து விட்டு ஓட்டலில் தற்கொலை செய்திருக்கிறார். அதில், நான் உன்னுடன் வந்து விடுகிறேன். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அதன் அறிக்கை முடிவிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.