ரிங்கு சிங், இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடமிருக்கா? கேப்டன் சூர்யகுமார் பதில்!

2025ஆம் ஆண்டில் இந்திய அணிக்கான அனைத்து போட்டிகளும் முடிவடைந்து விட்டன. ரசிகர்கள் அனைவருமே 2026 பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக காத்திருக்கின்றனர். இத்தொடருக்கான இந்திய அணி டிசம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் மாற்றங்களை செயது அதிர்ச்சியில் ஆழ்த்தினர் தேர்வு குழுவினர். சமீபத்தில் டி20ன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில்லை அணியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் அக்சர் படேலை அந்த பதவிக்கு நியத்தனர். இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Add Zee News as a Preferred Source

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு 

அதேபோல் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர்கள் இந்திய அணிக்கு திரும்பி உள்ளனர். அணியின் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு இப்படியான ஒரு முடிவை தேர்வுக்குழு எடுத்தது அனைவரிடமும் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது. தொடர்ந்து சொதப்பி வந்த சுப்மன் கில்லை தூக்கிவிட்டு அதிரடியான இளம் வீரர்களை கொண்டு வந்தது சரியான தேர்வு என பலரும் கூறி வருகின்றனர். 

Ishan kishan & Rinku Singh: இஷான் கிஷன், ரிங்கு சிங் விளையாடுவார்களா? 

டி20 உலகக் கோப்பைக்கான இந்த அணிதான் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி இருக்கிறது. இந்த சூழலில்,நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி வந்திருக்கிறது. இந்த நிலையில், இந்த கேள்விக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார். 

Suryakumar Yadav: கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் 

இது தொடர்பாக அவர் பேசுகையில், டி20 உலக கோப்பை தொடர் முழுவதுமே ஒரு மாதிரியான பிளேயிங் லெவனை கொண்டுதான் விளையாட இருக்கிறோம். அதற்கு முன்பாக நடக்க இருக்கும் நியூசிலாந்து டி20 தொடரில் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு அவர்களுக்கான நேரம் வரும். அப்பொழுது அவர்கள் வாய்ப்பு கிடைக்கும். அப்படி அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

Team India: எதிரணிக்கு ஏற்றவாறு இந்திய அணி இருக்கும் 

அதேபோல் ஒருமுறை வாய்ப்பு கொடுப்பதனால் கண்டியாக நீண்ட ஒரு பயணத்தை கொடுப்போம். அவ்வளவு எளிதில் பிளேயிங் 11ல் மாற்றங்கள் இருக்காது. எதிர் அணி எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு இந்திய அணியின் பிளேயிங் லெவன் பலமான இருக்கும். இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார். 

.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.