கலக்கிய CSK வீரர்.. ரூ. 14 கோடி வீண்போகல.. பிளேயிங் 11ல் கன்பார்ம்!

Vijay Hazare Trophy CSK Player Prashant Veer Performance: விஜய் ஹசாரே டிராபி 2025 நேற்று (டிசம்பர் 24) தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரிங்கு சிங் தலைமையிலான உத்தர பிரேச அணியும் ராகுல் சிங் கஹ்லௌட் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் உத்தர பிரேதச அணி பேட்டிங் செய்தது. தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய இந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 324 ரன்களை குவித்தது. 

Add Zee News as a Preferred Source

அதிகபட்சமாக தொடக்க வீரர்களான அபிஷேக் கோசாமி 81, அரியன் ஜுயல் 80, அதன்பின் வந்த துருவ் ஜுரேல் 80 ரன்கள் கேப்டன் ரிங்கு சிங் 67 ரன்கள் எடுத்தனர். ஹதராபாத் அணி சார்பில் எம்.டி. அர்ஃபாஸ் அகமது 2 விக்கெட்களை எடுத்திருந்தார். இதையடுத்து 325 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்த நிலையில்தான் ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 14.20 கோடி கொடுத்து வாங்கிய பிரசாத் வீர் 3 விக்கெட்கள் எடுத்து அசத்தி உள்ளார். 

Prashant Veer: கலக்கிய சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர்

தொடக்க முதலே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹைதராபாத் அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க வீரர் தன்மய் அகர்வால் 53, அந்த அணியின் கேப்டன் ராகுல் சிங் கஹ்லௌட் 32, ராகுல் புத்தி 47, வருண் கௌட் 45 ரன்களையும் எடுத்தனர். உத்தர பிரதேச அணி சார்பில் அதிகபட்சமாக ஜீஷான் அன்சாரி 4 விக்கெட்களையும், சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

20 வயதேயான பிரசாந்த் வீரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ. 14.20 கோடிக்கு வாங்கியது. முதலில், இந்தியாவுக்காக இதுவரை அறிமுகமே ஆகாத (Uncapped) ஒரு வீரரை சிஎஸ்கே அணி ஏன் இவ்வளவு தொகை கொடுத்து வாங்குகிறது என்ற கேள்வியும் சந்தேகமும் அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்த சூழலில், பிரசாந்த் வீர் தனது பந்து வீச்சால் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்துள்ளார். விஜய் ஹசாரே தொடரின் முதல் போட்டியிலேயே இவரது செயல்பாடு ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Prashant Veer will get a place in the CSK playing 11: பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா? 

வரும் ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே பிளேயிங் 11 எப்படி இருக்கப்போகிறது என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்கிறது. தற்போது புதிதாக வாங்கப்பட்ட பிராசாந்த் வீர் அணிக்குள் வந்திருக்கிறார். இதுபோன்று இன்னும் சில புதிய வீரர்கள் வந்திருக்கின்றனர். இவர்களது செயல்பாட்டை பார்த்தே சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்யும். பிரசாந்த் வீரால் ஜடேஜாவின் இடத்தை ஓரளவுக்கு நிரப்ப முடியும். அதனால் அவர் பிளேயிங் 11ல் எடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும், தற்போது வரை கணிக்கப்பட்ட பிளேயிங் 11ல் பிரசாந்த் வீருக்கு இடம் உள்ளது. 

CSK Predicted Playing XI For IPL 2026: ஐபிஎல் 2026க்கான சிஎஸ்கே அணியின் உத்தேச பிளேயிங் 11: சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), கார்த்திக் சர்மா, டெவால்ட் பிரேவிஸ், சிவம் துபே, பிரசாந்த் வீர், எம் எஸ் தோனி, நாதன் எல்லீஸ், மட் ஹென்ரி மற்றும் நூர் அகமது.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.