சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு இங்கிலாந்து அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் அரை மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவிட்டுள்ளது. அரசு திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை விளம்பரப்படுத்தவும் இளைஞர்களை ஈர்க்கவும் 200-க்கும் மேற்பட்ட இன்ஃப்ளூயன்சர்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுத் தொடர்பு நிறுவனமான டேன்ஜரின் தகவல் அறியும் உரிமை (FoI) சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தி கார்டியன் பத்திரிகை இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த செலவினம் உள்துறை, நீதி, பாதுகாப்பு மற்றும் வேலை–ஓய்வூதிய அமைச்சகங்களின் மூலம் […]