16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவைப் போன்று சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. குழந்தைகள் எளிதில் ஆபாச உள்ளடக்கங்களை அணுக முடிவது குறித்து மதுரையைச் சேர்ந்த எஸ். விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு இதைத் தெரிவித்துள்ளது. இணைய சேவை வழங்குநர்கள் (ISPs) பெற்றோர் கட்டுப்பாடு […]