விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.
அனிருத் பேசுகையில், ” எனக்கு 21 வயதிருக்கும்போது நான் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தேன்.
அப்போது என்னை நம்பி விஜய் சார் ‘கத்தி’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்போதே அவர் பெரிய நடிகராக இருந்தார்.
அந்த வாய்ப்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். ‘கத்தி’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘லியோ’ என நாம் சேர்ந்து பணியாற்றிய படங்கள் அனைத்துப் படங்களின் பாடல்களும் ஹிட் அடித்திருக்கின்றன.

இப்போது ‘ஜனநாயகன்’ ஆல்பமும் ஹிட்டாகும். நான் பல கான்சர்ட்களுக்கு சென்றிருக்கிறேன்.
ஆனால், இது போல் ஒரு எனர்ஜி எங்கும் பார்த்ததில்லை. தளபதி ஒருவருக்காக மட்டுமே அது! ” என்றவர், “ஜனநாயகன் சம்பவமாக இருக்கும்!” எனப் பேசினார்.