இந்தியா பெயர் கொண்ட அணியில் ஆடிய கபடி வீரருக்கு பாகிஸ்தான் தடை! – என்ன நடந்தது?

பஹ்ரைனில் தனியார் போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை காலவரையின்றி தடைசெய்து பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு உத்தரவிட்டிருக்கிறது.

பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் வீரர்

பஹ்ரைனில் ‘ஜிசிசி கோப்பை’ (GCC Cup) என்ற பெயரில் தனியார் கபடி தொடர் (டிச.16)நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் பெயரில் தனியார் அணிகள் கலந்து கொண்டன. இதில் ஒரு அணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த அணிக்காக பாகிஸ்தான் வீரர் உபைதுல்லா ராஜ்புத் களமிறங்கினார்.

அவர் இந்திய ஜெர்சி அணிந்து விளையாடிய புகைப்படங்களும், இந்தியக் கொடியை அசைப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு தடை செய்திருக்கிறது.

பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் வீரர்

தான் விளையாடப் போகும் அணி இந்திய அணி என்பது தனக்குத் தெரியாது என்றும், இது ஒரு தவறான புரிதல் என்றும் உபைதுல்லா ராஜ்புத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் உபைதுல்லா ராஜ்புத்,”கடைசிவரை அவர்கள் அணிக்கு இந்திய அணியின் பெயர் சூட்டியது எனக்குத் தெரியாது, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன். கடந்த காலங்களில் தனியார் போட்டிகளில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு தனியார் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.