நாடு முழுவதும் உள்ள வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் (Driving License) வைத்திருப்பவர்கள், தங்களின் தற்போதைய மொபைல் எண்ணை Vahan மற்றும் Sarathi போர்ட்டல்களில் அப்டேட் செய்து வைத்திருப்பது மிகவும் அவசியம். புதுப்பித்தல் (Renewal) பணிகளுக்கான OTP-கள், இ-சலான் (E-Challan) குறுஞ்செய்திகள், காப்பீடு நினைவூட்டல்கள் மற்றும் போக்குவரத்துத் துறையின் முக்கிய அறிவிப்புகளைப் பெற இது உதவும். இந்த இரண்டு போர்ட்டல்களிலும் மொபைல் எண்ணை எப்படி எளிதாக மாற்றுவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Add Zee News as a Preferred Source
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் வாகன உரிமையாளராகவும், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவராகவும் இருந்தால், இரண்டு போர்ட்டல்களிலும் தனித்தனியாக எண்ணை மாற்ற வேண்டும். ஒன்றில் மாற்றினால் மற்றொன்றில் தானாக மாறாது.
1. வாகனப் பதிவில் (Vahan Portal) மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
உங்கள் வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் (RC) மொபைல் எண்ணை மாற்ற இந்த முறையைப் பின்பற்றவும்:
* அதிகாரப்பூர்வ Vahan மொபைல் அப்டேட் பக்கத்திற்குச் செல்லவும்.
* உங்கள் வாகன எண் (Vehicle Number), சேஸ் எண் (Chassis Number) மற்றும் என்ஜின் எண் (Engine Number) ஆகியவற்றை உள்ளிடவும்.
* இப்போது நீங்கள் இணைக்க விரும்பும் புதிய மொபைல் எண்ணைத் டைப்செய்யவும்.
* உங்கள் புதிய எண்ணிற்கு ஒரு OTP வரும். அதை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும் (Submit).
* இப்போது உங்கள் வாகனப் பதிவு ஆவணங்களில் புதிய மொபைல் எண் வெற்றிகரமாக அப்டேட் ஆகிவிடும்.
2. ஓட்டுநர் உரிமத்தில் (Sarathi Portal) மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
உங்கள் டிரைவிங் லைசென்ஸில் (DL) மொபைல் எண்ணை மாற்ற இந்த முறையைப் பின்பற்றவும்:
* Sarathi போர்ட்டலுக்குச் செல்லவும்.
* உங்கள் உரிமம் எந்த மாநிலத்தில் வழங்கப்பட்டதோ, அந்த மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் (எ.கா: Tamil Nadu).
* முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Others’ என்ற மெனுவிற்குச் சென்று, அதில் ‘Mobile Number Update’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* உங்கள் ஓட்டுநர் உரிம எண் (License Number), பிறந்த தேதி மற்றும் பிற அடையாள விவரங்களை உள்ளிடவும்.
* உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு, அதற்கு வரும் OTP-யைச் சமர்ப்பிக்கவும்.
* இப்போது உங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் புதிய எண் இணைக்கப்பட்டுவிடும்.
ஏன் இதை உடனே செய்ய வேண்டும்?
உங்கள் பழைய எண் பயன்பாட்டில் இல்லை என்றால், போக்குவரத்து விதிமீறல்களுக்கான இசலான் மெசேஜ்கள் உங்களுக்குத் தெரியாமல் போகலாம். இது அபராதத் தொகை அதிகரிக்கக் காரணமாகும். உங்கள் ஆவணங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய முயன்றால் உடனடியாக உங்களுக்குத் தெரியவரும். உரிமத்தைப் புதுப்பிக்கவோ அல்லது முகவரி மாற்றம் செய்யவோ ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது OTP பெறுவதில் சிக்கல் இருக்காது. கடைசி நேரத்தில் OTP வராமல் அவதிப்படுவதைத் தவிர்க்க, இப்போதே சில நிமிடங்களில் இந்த அப்டேட்டைச் செய்து விடுங்கள்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More