Mobile Hacking Tips : இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. அதே சமயம், ஸ்மார்ட்போன் ஹேக்கிங் மற்றும் ‘கால் ஃபார்வர்டிங்’ (Call Forwarding) மோசடிகள் அதிகரித்து வருவது பெரும் கவலையை அளிக்கிறது. ஹேக்கர்கள் நமது அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மிக முக்கியமாக வங்கிப் பரிவர்த்தனைக்கான ஓடிபி (OTP) எண்களை நமக்குத் தெரியாமலேயே வேறு எண்களுக்குத் திசைதிருப்பி விடுகின்றனர். இப்படியான ரகசியக் கண்காணிப்பிலிருந்து நமது ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி என்பது குறித்த விரிவான விளக்கம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Add Zee News as a Preferred Source
கால் ஃபார்வர்டிங் மூலம் ஹேக்கிங் நடப்பது எப்படி?
வழக்கமாக நாம் நமது வசதிக்காகப் பயன்படுத்தும் ‘கால் ஃபார்வர்டிங்’ வசதியை ஹேக்கர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். உங்கள் மொபைலுக்கு வரும் முக்கியமான அழைப்புகள் அல்லது வங்கிக் குறுஞ்செய்திகள் உங்களுக்கு வராமல், வேறொரு மோசடி நபரின் எண்ணிற்குச் செல்லும் வகையில் அவர்கள் செட்டிங்ஸை மாற்றிவிடுவார்கள். இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி கணக்குகள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கும். இதனை ஒரு எளிய யுஎஸ்எஸ்டி (USSD) குறியீடு மூலம் நாம் கண்டறிய முடியும்.
* உங்கள் மொபைலில் கால்பார்வேடிங் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, உங்கள் போனின் டயலர் (Dialer) செயலியைத் திறந்து *#21# என்ற எண்ணை உள்ளிட்டு அழைக்கவும்.
* சில நொடிகளில் உங்கள் திரையில் ஒரு செய்தி தோன்றும். அதில் வாய்ஸ் கால் (Voice), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் டேட்டா (Data) ஆகிய சேவைகளின் நிலை காட்டப்படும்.
* இந்தச் சேவைகளுக்கு நேராக “Not forwarded” என்று இருந்தால், உங்கள் மொபைல் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம்.
* மாறாக, ஏதேனும் ஒரு மர்ம எண் அங்கு குறிப்பிடப்பட்டிருந்தால், உங்கள் தகவல்கள் அந்த எண்ணிற்குத் பார்வேர்டு செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
தீர்வு
* ஒருவேளை உங்கள் அழைப்புகள் வேறு எண்ணிற்குத் திசைதிருப்பப்படுவது உறுதியானால், உடனடியாக அதனை ரத்து செய்ய வேண்டும்.
* இதற்கு மீண்டும் உங்கள் டயலர் செயலியில் ##002# என்ற குறியீட்டை உள்ளிட்டு அழைக்கவும். இ
* இந்த எண்ணை டையல் செய்வதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து வகையான கால் ஃபார்வர்டிங் செட்டிங்ஸ் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பும்.
எச்சரிக்கை
இந்தச் சோதனையை மாதம் ஒருமுறை செய்வது நல்லது. குறிப்பாக, உங்களுக்கு வரவேண்டிய அழைப்புகள் வராமலிருப்பது, ஓடிபி வருவதில் தாமதம் ஏற்படுவது அல்லது தேவையற்ற விளம்பர அழைப்புகள் அதிகரிப்பது போன்ற அசாதாரண மாற்றங்களை உணர்ந்தால் உடனடியாக இக்குறியீடுகளைப் பயன்படுத்திச் சரிபார்க்க வேண்டும்.
இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iPhone) ஆகிய இரண்டு வகையான மொபைல்களிலும் தடையின்றிச் செயல்படும். ஒருவேளை நீங்கள் ஃபார்வர்டிங் வசதியை ரத்து செய்த பிறகும் மீண்டும் அது தானாகவே மாறினால், தாமதிக்காமல் உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் (Telecom Operator) தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.
இத்தகைய எளிய தொழில்நுட்பக் குறியீடுகளைத் தெரிந்து வைத்திருப்பது, இணையக் குற்றவாளிகளிடமிருந்து நமது தனிப்பட்ட தரவுகளையும் நிதி பாதுகாப்பையும் உறுதி செய்ய பெரிதும் உதவும்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More