காற்றில் கரைந்த கோடிகள்.. சொதப்பிய RCB வீரர்.. எல்லாம் வேஸ்ட்டா? முழு விவரம்

Royal Challengers Bengaluru Latest News: கடந்த சில தினங்களுக்கு முன்பாக விஜய் ஹசாரே தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் விராட் கோலி, ரோகித், சர்மா, ரிஷப் பண்ட் உட்பட சர்வதேச இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதேபோல் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்கள் பலரும் விளையாடுகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் மினி ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூ. 7 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரும் விளையாடி வருகிறார். அவர் மத்திய பிரதேச அணிக்காக விளையாடுகிறார். இந்த அணியின் கேப்டனாக இருந்து வீரர்களையும் வழிநடத்துகிறார் வெங்கடேஷ் ஐயர். 

Add Zee News as a Preferred Source

Venkatesh Iyer Poor Form Continues: சொதப்பிய வெங்கடேஷ் ஐயர் 

இந்த சூழலில்,  நேற்று (டிசம்பர் 29) திங்கட்கிழமை மத்திய பிரதேச அணி கேரளா அணிக்கு எதிராக மோதியது. டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து. அதன்படி பேட்டிங் செய்ய வந்த மத்திய பிரதேச அணி 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க வீரர்களான ஹர்ஷ் காவ்லி 22, யாஷ் துபே 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒன் டவுனில் களமிறங்கிய ஹிமான்ஷு மந்திரி மாத்ரே மட்டுமே சிறப்பாக விளையாடினார். அவர் 105 பந்துகளில் 93 ரன்களை குவித்தார். இந்த நிலையில்தான் மிடில் ஆர்டரில் களத்தில் நின்று அணிக்கு ரன்களை சேர்க்க வேண்டிய வெங்கடேஷ் ஐயர் சொதப்பினார். 

களத்திற்கு வந்தது முதலே தடுமாறிய வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டனாகவும் நட்சத்திர வீரர் என்பதாலும் இவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் சுக்கு நூறாக உடைத்தார் வெங்கடேஷ் ஐயர். இதன் காரணமாக ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளானார். பந்து வீச்சு சிறப்பாக இருந்ததால் மத்திய பிரதேச அணி கேரளா அணியை வீழ்த்தி 47 ரன்களை வித்தியாசத்தில் வென்றதால் ஓரளவு கூடுதல் விமர்சனங்களில் இருந்து தப்பித்தார் என்றே சொல்ல வேண்டும். 

RCB Buy Venkatesh Iyer For RS 7 Crore:  ரூ. 7 கோடிக்கு சரிந்த வெங்கடேஷ் ஐயர் 

மிடில் ஆர்டரில் அணிக்கு பலம் தருவார், ஓரளவு பந்து வீச்சிலும் பங்களிப்பார் என்ற நம்பிக்கையில்தான் கடந்த 2025ஆம் ஆண்டு ஐபிஎல்லுக்கு முன் நடந்த மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 23 கோடிக்கு வாங்கியது. ஆனால் 2025 ஐபிஎல்லில் மோசமாக விளையாடி அந்த அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். 7 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் வெறும் 142 ரன்களை மட்டுமே எடுத்தார். 

இதன் காரணமாக கேகேஆர் அணி அவரை 2026 மினி ஏலத்திற்கு முன்பாக விடுவித்தது. இதையடுத்து அவரை ஏலத்தில் லக்னோ மற்றும் குஜராத் அணியுடன் போட்டிப்போட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 7 கோடிக்கு எடுத்தது. சரி வரும் ஆண்டிலாவது அவர் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தற்போது உள்ளூர் போட்டிகளில் சொதப்பி இருப்பது பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. 

RCB Playing 11 For IPL 2026: ஆர்சிபி பிளேயிங் 11ல் இடம் இருக்கா? 

வெங்கடேஷ் ஐயர் தன்னை நிரூபித்தால் மட்டுமே அவருக்கு வரும் 2026 ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் பிளேயிங் 11ல் இடம் கிடைக்கும். ஆனால் இப்படி சொதப்பும் பட்சத்தில் அவரை ஆர்சிபி அணி நிர்வாகம் பெஞ்சிலேயே அமர வைக்கும்.   இதற்கிடையில் வெங்கடேஷ் ஐயர் குறித்து பேசிய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, அவர் நல்ல வீரர்தான். ஆனால் அவருக்கு ஐபிஎல் சீசனின் தொடக்க போட்டிகளில் வாய்ப்புகள் கிடைப்பது கடினமே என கூறினார்.

Venkatesh Iyer IPL Stats: வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் செயல்பாடு 

வெங்கடேஷ் ஐயர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அந்த ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் அவர் மேல் நம்பிக்கை வைத்து எடுத்தது. தனது முதல் போட்டியை பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் தற்போது தன்னை நிரூபிக்க பெங்களூரு அணிக்கே வந்துள்ளார். இதுவரை 62 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள வெங்கடேஷ் ஐயர் 1468 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி 30 நெருங்கி உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 137ஆக உள்ளது.  இதில் ஒரு சதம் மற்றும் 12 அரைசதங்கள் அடங்கும். திறமையான வீரர்தான், ஆனால் தற்போது ஃபார்மில் இல்லாமல் உள்ளார். தற்போது வாய்ப்பை அளித்துள்ள பெங்களூரு அணி அவரது ஃபார்மை எதிர்பார்த்திருக்கிறது. அதனால் தொடர்ந்து சொதப்பாமல் விரைவில் அவர் நல்ல ஃபார்முக்கு திரும்புவது சிறப்பாக இருக்கும் என ரசிகர்களால் கருதப்படுகிறது. 

RCB Full Squad For IPL 2026: ஐபிஎல் 2026 ஆர்சிபி அணி வீரர்கள் விவரம் 

ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி, தேவ்தத் படிக்கல், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, க்ருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார், நுவான் துஷாரா, ரசிக் சிங், அபிநந்தன் ஷர்மா, அபிநந்தன் ஷர்மா. வெங்கடேஷ் ஐயர், ஜேக்கப் டஃபி, சாத்விக் தேஸ்வால், மங்கேஷ் யாதவ், ஜோர்டான் காக்ஸ், விக்கி ஓஸ்ட்வால், விஹான் மல்ஹோத்ரா, கனிஷ்க் சவுகான்.

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.